கொரோனாவை தடுப்பதில்.. மத்திய அரசு சரியாக செயல்படவில்லை.. 45% பேர் கருத்து.. ஆய்வில் தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்று 45% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் முதல் அலையை விட, இரண்டாவது அலை கடும் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி மற்றும் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் மனநிலை என்ன?

மக்கள் மனநிலை என்ன?

இந்த நிலையில் கடும் எழுச்சி பெற்ற கொரோனா அலைக்கு மத்தியில் இந்தியர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? கொரோனா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நினைப்பது என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸின் நடத்திய ஆய்வு முடிவுகள் பின்வரும் தகவல்களை கூறியுள்ளன.

20% பேர் கோபம்

20% பேர் கோபம்

மொத்த பதிலளித்தவர்களில் 45 சதவீதம் பேர் வைரஸின் இரண்டாவது அலையை இந்திய அரசு சரியான பாதையில் சமாளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். பெறப்பட்ட 8,141 பதில்களில், 23 சதவீதம் பேர் கொரோனாவால் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் தாங்கள் வருத்தமாகவும் கோபமாகவும் இருப்பதாகவும், 10 சதவீதம் பேர் மிகவும் கோபமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

28% பேர் நம்பிக்கை

28% பேர் நம்பிக்கை

8 சதவீதம் பேர் தாங்கள் மனச்சோர்வடைந்த நிலையில் உள்ளதாகவும், 7 சதவீதம் தாங்கள் அமைதியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். 28 சதவீதம் பேர் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி வல்லுநர்கள் நாடு முழுவதும் வைரஸை திறம்பட கையாளுகிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 51 சதவீதம் பேர் பதில் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அரசு மீது குற்றச்சாட்டு

அரசு மீது குற்றச்சாட்டு

தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை அரசு திறமையாக கையாளுகிறதா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மொத்தம் 8,367 பேரில், 45 சதவீதம் பேர் அரசு சரியான பாதையில் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். 41 சதவீதம் பேர் அரசு சரியான பாதையில் செல்வதாகவும் 14 சதவீதம் பேர் உறுதியாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஊரடங்குக்கு ஆதரவு

ஊரடங்குக்கு ஆதரவு

தவறான முன்னுரிமைகள், உறுதியற்ற தன்மை மற்றும் ஆயத்தமின்மை ஆகியவை இந்தியா சரியான பாதையில் இல்லை என்று நம்புவதற்கு முக்கிய காரணங்கள் என்று அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான ஊரடங்குக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் 324 மாவட்டங்களில் இருந்து 25,000 க்கும் மேற்பட்டவர்களிடம் லோக்கல் சர்க்கிள்ஸின் ஆய்வு நடத்தியது. இவர்களில் 65 சதவீதம் ஆண்கள். 35 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+