டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் இதுதான் மிகவும் குறைவான ஒருநாள் பாதிப்பு ஆகும்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தினசரி பாதிப்பு தற்போது 15 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 3,39,84,479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 2,07,937 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 177 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,50,991 பேர் பலியாகி உள்ளனர்.

 கொரோனா பாதிப்பில் இருந்து உலக அளவில் இதுவரை பேர் 216,216,083 டிஸ்சார்ஜ்.. 4,872,093 பேர் பலி கொரோனா பாதிப்பில் இருந்து உலக அளவில் இதுவரை பேர் 216,216,083 டிஸ்சார்ஜ்.. 4,872,093 பேர் பலி

கேரளா

கேரளா

கேரளாவில் தினசரி கேஸ்கள் குறைந்த காரணத்தால் இந்தியாவிலும் தேசிய அளவில் பதிவான மொத்த கேஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கொரோனா கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் அங்கு 7 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. கேரளாவில் 6,996 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 26,342 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,73,442 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 1,01,483 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,79,608 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,39,578 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,04,320 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 32,115 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திராவில் கொரோனா காரணமாக 20,57,562 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 310 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 14,256 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,36,048 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 7,258 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 1350க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாம் அலை பரவலுக்கான அறிகுறிகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,79,568 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,796
பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,27,780 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,992 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்திலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கொரோனா காரணமாக 17,09,965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 11பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 142 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 22,895 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 16,86,928 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

English summary
Covid 19 Count: Only 13,183 people were affected by the virus in India in last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X