நிலைமை மோசமாகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இந்தியாவில் ஏற்பட்ட அதீத கொரோனா பாதிப்பு
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,553 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.இது தான் இந்தியாவில் ஓரு நாளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
Recommended Video
இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000த்தை தாண்டி உள்ளது .நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,715 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2546 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் . நாட்டில் இதுவரை கொரோனாவால் 543 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசதம் மற்றும் ராஜஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்றைக்கு புதிதாக பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தூர் நிலவரம்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் மேலும் மூன்று பேர் இறந்தனர், இதன் மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்தூரில் ஏழு பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தூரில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது

2 பேர் உயிரிழப்பு
பீகாரில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் மூன்று நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பீகார் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பீகார் மாநிலத்தில் இரண்டு பேரை கொன்றுள்ளது. 42 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

108 பேருக்கு பாதிப்பு
குஜராத்தில் இன்று மட்டும் 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,851 ஆக உயர்ந்தது. குஜராத்தில் மேலும் நான்கு நோயாளிகள் கொரோனா வைரஸால் இன்று உயிரிழந்துள்ளனர், இதனால் அந்த மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசா நிலவரம்
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் புதிதாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு 68 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜெய்ப்பூரில் அதிகம்
ராஜஸ்தானில் கொரோனா வைரஸால் மேலும் ஒருவர் இறந்தார், இன்றைய நிலவரப்படி 17 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரஸ் காரணமாக ராஜஸ்தானில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். அதில் ஜெய்ப்பூரில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 1,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

உள்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் எழுபத்தைந்து பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மூன்று பேர் இறந்ததால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில் 20 ஆக உயர்ந்துள்ளன. இந்தூர், மும்பை, புனே, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை அதி தீவிரமாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications