அதிர்ச்சி.. பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா.. வெளியான அறிவிப்பு
டெல்லி: பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு அதி தீவிரமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா பரவியுள்ள தகவலை பிரஸ் இன்பர்மேஷன் பீரோ என்ற மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதிக்கப்பட்ட 6 பேரில், 3 பேருக்கு பெங்களூர் நிமான்ஸ் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு பேருக்கு ஹைதராபாத்திலும், மற்றொன்று புனே ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அந்தந்த மாநில அரசுகள் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தனி அறைகளில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 33 ஆயிரம் பேர் திரும்பியுள்ளனர். பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களிடம் இருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

116 பேருக்கு பாதிப்பு
அதில் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. ஆனால், அதில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்காக மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பரவியுள்ளதா
பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது என்றால் அது கர்நாடகாவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரியாக இருக்கக்கூடும். அல்லது தென் மாநிலங்களில் எங்கிருந்தாவது அனுப்பப்பட்ட மாதிரியாக இருக்க கூடும் என்று தெரிகிறது. எனவே உருமாறிய கொரோனா தென் மாநிலங்களிலும் வந்துவிட்டதா என்று பரபரப்பு நிலவுகிறது.

வேகமாக பரவும்
இருப்பினும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நோயாளிகள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இல்லை. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் 70% வேகமாக பரவுவதாக இங்கிலாந்து அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. எனவேதான் உரு மாற்றம் என்பது வைரஸ் தொடர்பான வியாதிகளில் சகஜம் என்றாலும் இந்த உருமாற்றம் குறித்து, அதிக அச்சம் ஏற்படுகிறது.

முகக் கவசம் அவசியம்
எந்தவகையான கொரோனாவாக இருந்தாலும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பராமரித்தால் போதும், உருமாறிய கொரோனாவாக இருந்தாலும் பரவாமல் தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். ஒருவேளை இது வேகமாக பரவினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவரும் என்ற அச்சம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications