இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இன்று கொரோனா தொற்று அதிகம்.. ஷாக் அளிக்கும் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இன்று உச்சபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69400ஐ தொட்டுளளது. சுமார் 45 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 21664 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். சுமார் 2200க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

COVID -19: Tamil Nadu added the maximum cases today

இந்நிலையில் நாட்டிலயே அதிகபட்சமாக மாகாராஷ்டிராவி 22171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 8542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 8002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது இடத்தில் உள்ள டெல்லியில் 7233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இன்றைக்கு நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 798 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக குஜராத்தில் 347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 310 பேருக்கும், ராஜஸ்தானில் 126 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 171 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 106 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 124 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் இன்று ஒரே நாளில் 235 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இன்று 92 பேரும், மத்திய பிரதேசத்தில் 71 பேரும், டெல்லியில் 60 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். குஜராத்தில் இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 6 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 5 பேரும் ராஜஸ்தானில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+