தடுப்பூசி பணிகள் மந்தம்.. காரணம் பற்றாக்குறை இல்லை, ஊரடங்கு கட்டுப்பாடுகள்... சமாளிக்கும் அதிகாரிகள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் வேகம் குறைய, பல பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தான காரணம் என்றும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பல மாநிலங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன,

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகமும் குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஏப்ரல் 3-9 தேதிகளில் 2.48 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இருப்பினும், அதன் பின்னர் ஏப்ரல் 10-16 வரை 2.07 கோடி பேர் ஏப்ரல் 17-23 வரை 1.7 கோடி பேர், ஏப்ரல் 24-30 வரை 1.48 கோடி பேர் எனத் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே தடுப்பூசி பணிகள் குறைந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசி பணிகள் வேகம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சில மாநிலங்கள் தேவையான இடங்களுக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்காததும் இதற்கான முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நகப்புறங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் இருப்பினும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்பகுதிகளில் தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications