கொரோனா தடுப்பூசி... 8 முதல் 10 மாதங்கள் வரை மட்டுமே பலன் தரும்... எய்மஸ் இயக்குநர் புது தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை என்றும் தடுப்பூசி சுமார் எட்டு முதல் 10 மாதங்கள் வரை பலன் அளிக்கும் என்றும் எய்மஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது வரை நான்கு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் ரத்த உறைதல் போன்ற மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. இதனால் சில நாடுகளில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அதிகரிக்கக் காரணம் என்ன

கொரோனா அதிகரிக்கக் காரணம் என்ன

கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் இந்தியாவில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மோசமான பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் எய்மஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். மேலும், மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததே கொரோனா பரவல் அதிகரித்ததற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

மேலும், அடுத்து வரும் சில காலம் அத்தியாவசியமற்ற போக்குவரத்தைப் பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இன்னும் சில காலம் என்றும் பொதுமக்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

8 முதல் 10 மாதங்கள்

8 முதல் 10 மாதங்கள்

கோவிஷீல்டு, கோவாக்சின் என்று இரண்டு தடுப்பூசிகளின் தடுப்பாற்றலும் அதிகமாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டுமே தேவையான அளவு ஆன்ட்டிபாடிகளை ஒருவரது உடலில் உற்பத்தி செய்வதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி 8 முதல் 10 மாகங்கள் வரை கொரோனா வைரசில் பாதிப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பு தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

உற்பத்தி குறைவு

உற்பத்தி குறைவு

தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி கே பால் கூறுகையில், சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசிக்கு அதிகளவில் தேவை உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி என்பது இல்லை. இதனால் ஒரே நேரத்தில் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாது.

படிப்படியாகத் தடுப்பூசி

படிப்படியாகத் தடுப்பூசி

எனவே சமூகத்தில் உள்ளவர்களில் யாருக்கு முதலில் தடுப்பூசி தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி அளித்து வருகிறோம். பொதுமக்கள் தங்களின் வாய்ப்பு வரும்போது, தவறாமல் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வி கே பால் தெரிவித்தார். இந்தியாவில் தற்போது வரை நான்கு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+