கொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி
நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ள
டெல்லி: கொரோனா 2வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நிலைமையை ஆர்.பி.ஐ. உன்னிப்பாக கவனித்து வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த வருடம் கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும் அதன் பொருளாதார பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ்,
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை என்றாலும் ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது. வேறு சில மாநிலங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதிகரித்துள்ள நிதி சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அறிவித்தார். கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், இரண்டாவது அலை, முதல் அலைகளை விட ஆபத்தானது என்றும் கூறினார்.
கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும் என்று தெரிவித்தார். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும் என்று கூறினார்.
முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளையும் அறிவித்தார்
மார்ச் 2022 வரை கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூ .50,000 கோடி பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. மைக்ரோ, சிறிய மற்றும் பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக சிறு நிதி வங்கிகளுக்கான சிறப்பு நீண்ட கால ரெப்போ நடவடிக்கைகள், 3-ஆண்டு ரெப்போ செயல்பாடுகள், ரெப்போ விகிதத்தில் 10,000 கோடி, புதிய கடன் வாங்கியவருக்கு ரூ .10 லட்சம் வரை, 31 அக்டோபர் 21 வரை வசதி செய்யப்படும் என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என்று கணித்துள்ளது. பருவமழையின் தாக்கம் கிராமப்புற தேவை மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பணவீக்க அழுத்தங்களில் இணக்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் சக்திகாந்த தாஸ்.
உணவு தானியங்களின் உற்பத்தி சாதாரண பருவமழை கட்டுப்படுத்த உதவும், குறிப்பாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள். ஏப்ரல் 2021 இல் கூட, வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் வலுவான வளர்ச்சி செயல்திறனைக் காண்கின்றன. அந்நிய செலாவணி இருப்புக்கள் உலகளாவிய பாதிப்பை சமாளிக்க எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றனர் என்றும் கூறினார்.
சந்தையின் நேர்மறையான பதிலைக் கருத்தில் கொண்டு, ஜி-எஸ்ஏபி 1.0 இன் கீழ் மொத்தம் ரூ.35,000 கோடிக்கு அரசு பத்திரங்களை இரண்டாவது கொள்முதல் மே 20 ஆம் தேதி நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மார்ச் 2022 வரை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடி பணப்புழக்கத்தை அறிவிக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதை அடுத்து மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தன்னலமின்றி சிறப்பாக பங்காற்றி வருகின்றனர் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications