3வது அலையா.. முடிவுக்கு வருகிறதா கொரோனா.. விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் சொல்வது என்ன?
அடுத்த வருடம் இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பி விடும் என்கிறார் சவுமியா சுவாமிநாதன்
டெல்லி: உலகில் 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டிருக்கும்போது, நிச்சயம் இயல்பு வாழ்க்கை திரும்பும்... அது எப்படியும் வரும் 2022 இறுதிக்குள் நடக்கும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4 மாதத்துக்கு முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை.. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசிகள், லாக்டவுன்கள், தளர்வுகள், கட்டுப்பாடுகள் என ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து வந்தன.
இதையடுத்து, இந்தியாவில் தொற்று 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது... ஆனாலும் 3வது அலை நிச்சயம் வரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர்..

பாதிப்பு
அதாவது, இப்போதுள்ள பாதிப்பில் வரும் அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் பாதிப்பு உச்சத்தை அடையும் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சில நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.. அவர் சொன்னதாவது:

பாதிப்பு
"தொற்று பரவலை தடுப்பது தொடா்பான விழிப்புணர்வுடன் மக்கள் எழ தொடங்கிவிட்டனர்.. கொரோனா தொற்றின் முதல், 2வது அலைகளில் அவ்வளவாக பாதிக்கப்படாத பகுதிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் உள்ள பகுதிகளில், அடுத்த சில மாதங்களில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தடுப்பூசி
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.. 3வது அலை பரவும்போது, சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம்.. ஆனால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை.. ஏனென்றால், 18 வயதை கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளும், சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவுதான்.

குழந்தைகள்
பெரியவர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே இறந்துள்ளனர். இருந்தாலும் குழந்தைகளை சேர்க்கும் அட்மிஷன் பிரிவு, குழந்தைகளுக்கான ஐசியூக்களை மருத்துவமனைகள் தயார் செய்வது நல்லது. கடந்த மாதங்களைபோல, இப்போது கொரோனா பரவல் இல்லை.. மெதுவாக பரவும் நிலையை நாடு அடைந்துள்ளது.. இப்போது அன்றாட தொற்று எண்ணிக்கை 25,000 என்று இருக்கும் நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு ஒருவித எண்டமிக் நிலையை எட்டி வருகிறது.. விரைவில் என்டெமிக் நிலைக்கு குறைய கூடும்

பரப்பளவு
இந்தியாவைப் பொறுத்த வரை அதன் பரப்பளவு மற்றும் பல்வேறு வகையான மக்களால், நோய் எதிர்ப்பு திறன் வெவ்வேறு அளவில் இருக்கிறது.. எனவே, வைரஸ் பாதிப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் தொடரலாம்.. நாட்டில் கொரோனா தொற்று இனி எப்போதும் இதுபோலவே சிறுசிறு ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டுவிட்டு நிரந்தரமாக இருக்கும் சூழலை எண்டமிக் என்பார்கள்.. எந்தப் பகுதியில் எல்லாம் முதல் 2 அலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லையோ அல்லது எங்கெல்லாம் தடுப்பூசி விநியோகத்தில் குறைபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் 3வது அலை ஏற்பட்டால் தாக்கம் சற்று அதிகமாக இருக்கலாம்" என்றார்...

அச்சம்
நாளுக்கு நாள் 3வது நாள் அலை பரவல் குறித்த அச்சம்நிலவி வரும்நிலையில், 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் 2022 இறுதியில் நாம் அதனை அடைவோம் என்றும் சவுமியா தெரிவித்துள்ளது ஓரளவு அச்சத்தை விலக்குவதாக உள்ளது... அதேசமயம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தையும் உணர்த்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications