இந்தியாவில் கொரோனா பாதிப்பு 86,498 பேராக குறைந்தது - 1,82,282 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்தது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை 15 நாட்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
டெல்லி : நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 86,498 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 63 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
ஒரே நாளில் 1,82,282 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,03,702 பேராக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குணமடைந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,89,96,473 பேராக அதிகரித்துள்ளது.

2.73 கோடி பேர் மீண்டனர்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,82,282 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,73,41,462 பேராக உயர்ந்துள்ளது.

13,03,702 பேர் சிகிச்சை
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,03,702 பேராக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 97,907 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2123 பேர் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2123 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309 பேராக அதிகரித்துள்ளது.

23,61,98,726 பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 7 வரை 23,61,98,726 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications