கோவாக்சினை உருவாக்க மட்டுமே "கன்றுக்குட்டி சீரம்" பயன்படுத்தப்பட்டது..சர்ச்சைக்கு மத்திய அரசு பதில்
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக வைக்கப்பட்ட புகார்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக கோவாக்சினை தயாரிப்பதில் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்பட்டது, வேக்சினில் சீரம் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாதி உள்ளிட்ட பலர் இணையத்தில் கோவாக்சின் குறித்து கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஆர்டிஐ தகவல் ஒன்றை வெளியிட்டு கோவாக்சின் மருந்தில் கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக புகார் வைத்து இருந்தனர்.
20 நாட்கள் மட்டுமே வயது கொண்ட கன்றுக்குட்டியை கொன்று, அதன் ரத்தம் கட்டிய பகுதியை எடுத்து அதிலிருந்து நீர் போன்ற பகுதியை பிரித்து இந்த சீரம் உருவாக்கப்பட்டுளதாகவும். அந்த சீரம் கோவாக்சின் தடுப்பூசியில் இடம்பெற்றுள்ளதாகவும் இணையத்தில் புகார்களை வைத்து இருந்தனர்.

பதில்
இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு பதில் அளித்துள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் இடம்பெறவில்லை. மாறாக கோவாக்சினை தயாரிப்பதில் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்பட்டது. கோவாக்சினை உருவாக்குவதற்கு முதலில் செல்களை உருவாக்க வேண்டும்.

வெரோ செல்கள்
வெரோ செல்கள் என்ற அழைக்கப்படும் செல் ( vero cell ) வகைகளை உருவாக்க வேண்டும். இந்த செல் வகைகளை உருவாக்க மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்பட்டது. கன்றுக்குட்டியின் சீரத்தின் உதவியுடன் இந்த வெரோ செல்கள் உருவாக்கப்பட்டு, அது வளர்க்கப்படும். பின்னர் வெரோ செல்களில் ஒட்டி இருக்கும் கன்றுக்குட்டியின் சீரம் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலவை கொண்டு சுத்தம் செய்து நீக்கப்படும்.

நீக்கம்
பலமுறை இதே பணிகளை செய்து, மொத்தமாக அந்த செல்களில் இருந்து கன்றுக்குட்டியின் சீரம் நீக்கப்படும். பின்னர் இந்த வெரோ செல்களில் கொரோனா செலுத்தப்பட்டு அது வளர வைக்கப்படும். இந்த வைரஸ் வளர்ச்சியின் போதே செல்கள் மொத்தமாக இறந்துவிடும். பின்னர் அந்த கொரோனா வைரஸ் மட்டுப்படுத்தப்பட்டு, மீண்டும் சுத்தம் செய்யப்படும்.

வேக்சின்
இந்த மட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் மட்டுமே இறுதி வேக்சினாக வடிவம் பெறும். இதில் கன்றுக்குட்டியின் சீரம் இடம்பெறாது. அது தொடக்க நிலையிலேயே சுத்தப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும். இறுதியாக வரும் வேக்சினில் எங்கும் கன்றுக்குட்டி சீரம் இருக்கிறது, என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

விளக்கம்
மத்திய அரசை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனமும் இதே விளக்கத்தை கொடுத்துள்ளது. வேக்சினில் மட்டுப்படுத்தப்பட்ட வைரல் லோட் மட்டுமே இருக்குமே தவிர கன்றுக்குட்டியின் சீரம் போன்ற எந்த புற பொருட்களும் இருக்காது, இந்த உற்பத்தியை முறையை நாங்கள் 9 மாதங்களுக்கு முன்பே வெளிப்படியாக அறிவித்துவிட்டோம் என்று கூறியுள்ளது.

வெரோ செல்கள் உற்பத்தி
வெரோ செல்கள் உற்பத்தி செய்து அதன் மூலம் வேக்சின் உருவாக்குவது உலகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் செயல்தான். சினோவேக் நிறுவனம் உருவாக்கிய கொரோனாவேக் இப்படித்தான் வெரோ செல்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. அதேபோல் போலியோ, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வேக்சின் இதே முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications