‛‛பூத்தில் சார்ஜ் இல்லாத பேட்டரி’’.. இதுதான் தேர்தல் ஆணையமா? ஓட்டளிக்காமல் தவித்த பிருந்தா காரத்
டெல்லி: லோக்சபா தேர்தலில் காலையிலேயே கட்டுப்பாட்டு கருவியின் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் உள்பட ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையத்தை பிருந்தா காரத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நேற்றுடன் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஜுன் 1ம் தேதி 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் என்பது நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே தான் நேற்று 6வது கட்ட தேர்தல் நடந்தது. இதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத்துக்கு டெல்லியில் தான் ஓட்டு உள்ளது. டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளிக்கு சென்று அவர் ஓட்டளிக்க வேண்டும். அந்த வகையில் செயின்ட் கொலம்பியா பள்ளிக்கு பிருந்தா காரத் ஓட்டளிக்க நேற்று சென்றார்.
இந்த வேளையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கான கட்டுப்பாட்டு கருவியின் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனது. இதனால் அவர் உள்பட வாக்காளர்கள் காத்திருந்தனர். அதன்பிறகு கட்டுப்பாட்டு கருவியில் பேட்டரி மாற்றம் செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பிருந்தா காரத்தும் தேர்தலில் ஓட்டளித்தார்.
முன்னதாக பிருந்தா காரத் கடும் கோபமடைந்தார். மேலும் தேர்தல் ஆணையத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நாங்கள் ஓட்டளிக்க வந்தோம். ஆனால் மெஷினில் பேட்டரி டவுன் ஆக இருப்பதாக தெரிவித்தனர். காலையிலேயே மெஷின் பேட்டரியில் சார்ஜ் இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையம் எப்படி உள்ளது என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் புகார் கடிதம் எழுதியுள்ளேன். அது எப்படி காலை 9 மணிக்கே ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போகும்?. நாங்கள் 50 நிமிடங்கள் வரை காத்திருந்தோம். பொதுமக்கள் அனைவரும் வெயில் நின்றனர்'' என்றார்.
மேலும் பிருந்தா காரத் ஒட்டுச்சாவடி மையத்துக்கு வருவதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே கட்டுப்பாட்டு கருவியின் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனதாகவும், சுமார் 50 நிமிடங்கள் வரை காத்திருந்து பொதுமக்கள் ஒட்டளித்துள்ளனர். இதுபற்றி மாவட்ட தேர்தல் அதகிாரி கூறகையில், ‛‛வாக்குச்சாவடி மையத்தில் கட்டுப்பாட்டு கருவியின் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனது. இது காலை 10 மணிக்கு நடந்தது. அதன்பிறகு 15 நிமிடத்தில் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் தொடங்கியது'' என்றார்.












Click it and Unblock the Notifications