"காளிசரண் ஞாபகமிருக்கா".. குற்றம் செய்தாலும் கழுத்தில் "காவிதுண்டு" இருந்தால் பாஜக ஓடிவரும்: சிபிஎம்
காவிநிற துண்டு குறித்து பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்
டெல்லி: நீங்கள் என்ன குற்றம் செய்தாலும்சரி, உங்க கழுத்தில் காவி துண்டு மட்டும் இருந்தால் போதும், உங்களை காப்பாற்ற பாஜக ஓடோடி வரும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்..
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இந்து மத தலைவர் காளிசரண் மகாராஜ்.. இவர் வாயை திறந்தாலே சர்ச்சையாகிவிடும்.. உடனே அவருக்கு பாஜக சப்போர்ட்டுக்கு வந்துவிடும்.
இப்படித்தான், சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் ஒரு ஆன்மீக மாநாடு நடந்தது.. அந்த ஆன்மீக மாநாட்டில் காளிசரண் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார்...

வழக்கு பதிவு
அதுமட்டுமல்ல, மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை வழக்கம்போல் பாராட்டி பேசினார்... அவரது அந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது... காங்கிரஸ் கட்சி கொந்தளித்தது.. இது தொடர்பாக காளிசரண் மீது ராய்ப்பூர் போலீசில் புகாரும் தரப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.. ஆனால், அவ்வளவு பேசிய காளிசரணை காணவில்லை... அவரை போலீசாரும் தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்தார்.. அங்கேயே அவரை கைது செய்தனர்..

ஆட்சேபணை
இந்த கைது சம்பவம் பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கைது நடவடிக்கைக்கு மத்தியபிரதேச மாநில அரசு உடனடியாக தன்னுடைய ஆட்சேபனை கருத்துக்களை அப்போதே பதிவு செய்திருந்தது.. இதில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரை அதிர செய்தது.. கைலாஷ் விஜயவர்கியா சொன்னது இதுதான்:

தலைவர்கள்
"சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் தகுந்த வார்த்தைககளை பயன்படுத்த வேண்டும்... மத தலைவர்களிடம் சற்று தாராள மனப்பான்மை இருக்க வேண்டும்.. நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்... அப்போது இந்த என்னமோ பிரிவினையால் சூழப்பட்டு, துண்டு துண்டாக இருப்பது போன்ற தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள்.. அதற்காக உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைதும் செய்யப்பட்டனர்...

ஆம் ஆத்மி
இதனையடுத்து, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் இடதுசாரி தலைவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்து சென்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.. அவர்களின் முதுகில் தட்டி கொடுத்தார்கள்.. அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று விஜயவர்கியா கேள்வி எழுப்பியிருந்தார்... அதாவது காளிசரணுக்கு ஆதரவாக கைலாஷ் விஜயவர்கியா பேசியிருந்தார்..

பிருந்தா காரத்
இந்த பேச்சுக்குதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இதை பற்றி பிருந்தா காரத் சொன்னபோது, "காந்திஜியின் கொலையாளிகளை பாஜக மற்றும் சங்பரிவார் போற்றி பாராட்டும் என்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், அவர்களை பாதுகாக்க பாஜக தலைவர்கள் கேடயத்தை பயன்படுத்துவதான் நாட்டின் உச்சக்கட்ட சோகம்..

காவி துண்டு
இந்த காவி அனைத்து அரசியலமைப்பு விரோத, தேச விரோத சக்திகளையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது... ஒன்றும் வேணாம், உங்க கழுத்தில் காவி துண்டு மட்டும் அணியுங்கள், அதுக்கப்பறம் நீங்கள் சட்டத்திலிருந்து தானாகவே விடுபட்டு விடுவீர்கள்.. நீங்க என்ன குற்றம் செய்தாலும் சரி, கழுத்தில் காவி துண்டு மட்டும் போட்டுக் கொள்ளுங்கள், உடனே உங்களை காப்பாற்ற பாஜக வந்துவிடும்" என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications