மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலா
டெல்லி: நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்கான மானிய கடன் வீட்டு வசதி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றும், இதற்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பேக்கேஜ் தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 லட்சம் முதல் அதிகபட்சம் 18 லட்சம் வரையிலான வருமானம் பெறும் பிரிவினர் நடுத்தர வர்க்கத்து மக்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் வறுமைக் கோட்டை தாண்டி இருக்கலாம், ஆனாலும் அதிகமாக செலவிட முடியாத பிரிவினர் என்று கருதப்படுகிறார்கள்.
இவர்களுக்காக மானிய விலையில் கடன் வசதி மூலம் வீடு கட்டும் திட்டம், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அந்த திட்டம் நிறைவடைந்தது. இதுவரை இந்த திட்டத்தால் 3 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளனர்.
இந்த மானிய கடன் வீட்டு வசதி திட்டம், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும். அதாவது கூடுதலாக ஓராண்டுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும். இதனால் மேலும் 2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெறுவார்கள்.
அதுமட்டுமின்றி, கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலை வாய்ப்பு பெருகும், சிமெண்ட், செங்கல், பெயிண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடனடியாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்தும் அதிகரிப்பதால் பல துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications