அதிரடியாக புகுந்த இந்திய கடற்படை.. 15 பேரும் பத்திரமாக மீட்பு.. சோமாலிய கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
டெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் சமீப காலமாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.

இந்த கப்பல் கடத்தப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து எம்வி ருயின் சரக்கு கப்பலை மீட்க போர்க் கப்பல்களும் விமானங்களும் களத்தில் இறங்கின. ஐரோப்பிய யூனியன் கடற்படையும் இணைந்து கொண்டது. இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலும் ஒருவரை இந்திய கடற்படை மீட்டது.
இந்த நிலையில் 15 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்வி லைலா நோர்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. லைபீரியா நாட்டு கொடியுடன் வந்த இந்த சரக்கு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்தன. தொடர்ந்து கப்பலை நெருங்கியதும் எச்சரிக்கை விடுத்த கடற்படையினர்.. தொடர்ந்து கப்பலுக்குள் இறங்கினர். கப்பலுக்குள் இந்திய கடற்படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால், கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை. கடற்படையினர் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. முழுமையான சோதனைகளுக்கு பின் கப்பல் புறப்பட்டது. கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகளும் பிலிப்பைன்சை 6 பேரும் பத்திரமாக உள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications