மாமனார் சுத்த மோசம்.. "கழுகுகண்" அபாயம்.. உளறி கொட்டிய மகன்.. பதறிய மனைவி.. டெல்லி கொலையில் ட்விஸ்ட்
டெல்லி: கணவனை 22 துண்டுகளாக வெட்டி கூறு போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி.. இவருக்கு உதவியாக பெற்ற மகனே இருந்துள்ளார்.. எதற்காக அப்பாவை கொலை செய்தேன் என்று மகன் டெல்லி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாகவே, டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளவில்லை.. ஒரு இளைஞர், இந்த அளவுக்கு கொடியவராக இருக்க முடியுமா? இப்படியெல்லாம்கூட யோசிக்க முடியுமா என்று மிரள வைத்துகொண்டிருக்கிறார் அப்தாப்.
தன் காதலியை வெட்டி துண்டாக்கி எங்கே வீசினாரோ தெரியவில்லை.. அந்த உடல் பாகங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.. அப்படி உடல்பாகங்களை தேடி சென்றபோதுதான், சில உடல்பாகங்கள் கிடைத்தன..
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்.. கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?

பீஸ் பீஸ்ஸா
அவைகளை டெஸ்ட் செய்ய லேப்புக்கு அனுப்பி இருக்கிறார்கள்.. அப்போதுதான், வேறு ஒரு பகீர் கிளம்பி வந்துள்ளது.. துண்டு துண்டாக கிடைத்த உடல்பாகங்கள், ஷ்ரத்தாவினுடையது இல்லை என்று தெரியவந்ததும் அதிர்ந்து போய்விட்டார்கள்.. அப்படியானால், அது யாருடைய உடல்பாகம் என்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியிலும், விசாரணையிலும் இறங்கினார்கள்.. உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவியை ஆராய்ந்தனர்.. அப்போதுதான், வசமாக சிக்கினார் பூனம் என்ற பெண்.. யார் இவர்?

2 புருஷன்
பூனம் என்பவருக்கு 2 கணவன்கள்.. முதல் கணவன் பெயர் கல்லு.. இவர்களுக்கு பிறந்த மகன் தீபக்.. ஆனால், உடம்பு சரியில்லாமல், கடந்த 2016-ல் கல்லு இறந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த வருடமே, அஞ்சன் தாஸ் என்பவரை 2வது கல்யாணம் செய்துள்ளார் பூனம்.. இந்த அஞ்சன்தாஸுக்கும் ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. இவரது குடும்பம் பீகாரில் இருக்கிறது. முதல் மனைவிக்கும் அஞ்சான் தாஸுக்கும் மொத்தம் எட்டு குழந்தைகளாம்.. ஆனால், அவர்கள் எல்லாரையும் அம்போவென தவிக்கவிட்டுட்டு, பூனத்தை 2வது கல்யாணம் செய்து கொண்டார். எந்த வேலைக்கும் போக மாட்டாராம்..

ஏகப்பட்ட உறவு
எப்பவுமே வீட்டில் உட்கார்ந்துகொண்டு, பூனத்துடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தாலும், தாஸுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்துள்ளது.. இதெல்லாம் பார்த்து பொறுமையிழந்த நிலையில், பூனமும், தீபக்கும் அஞ்சான் தாஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.. அதன்படி, சம்பவத்தன்று தாஸுக்கு, மதுவில் தூக்க மாத்திரை கலந்து தந்து தூங்க செய்துள்ளனர்... அதற்கு பிறகு, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்... உடலை வெட்டிக் கொன்றதால், ரத்தம் பீறிட்டு வெளிவந்திருக்கிறது..

ஃபிரிட்ஜ்
அதனால், ரத்தம் முழுவதும் வடியும் வரை வீட்டிலேயே உடலை வைத்துள்ளனர்... அதற்கு பிறகு, பொறுமையாக, சடலத்தை எடுத்துவைத்துக் கொண்டு, 10 துண்டுகளாக வெட்டியுள்ளனர்... பிண வாடை வீசக் கூடாது என்பதற்காக, வெட்டிய உடலை, ஃபிரிட்ஜில் வைத்து மூடியுள்ளனர்... பிரிட்ஜில் வைத்திருந்த உடல்களை ஒவ்வொன்றாக பாண்டவ நகர் பகுதியில் எடுத்து வீசியுள்ளனர்.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு விஷயம் சென்றுள்ளது.. வீசிய உடல் பாகங்களில் இப்போதைக்கு 6 பாகங்களை மீட்டுவிட்டனர்.. இன்னும் 4 பாகங்கள் எங்கே என்று தெரியவில்லை.. தேடிக் கொண்டிருக்கிறார்கள்..

ஜூவல்ஸ்
இந்நிலையில், இந்த கொலைக்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்பட்டன.. பூனத்தின் முதல் கணவர் கல்லு, கேன்சர் நோயால் இறந்துவிடவும், தாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பூனத்தை தாஸ் திருமணம் செய்து கொண்டாலும், அவர்களுக்கு அடிக்கடி செலவுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார்.. சில சமயம், பூனத்தின் நகைகளையும் விற்று, அதை முதல் மனைவிக்கு பணம் அனுப்பியிருக்கிறார்.. இந்த விஷயம் பூனத்திற்கும், தீபக்கிற்கும் தெரிய வந்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தாஸை கொல்ல இதுதான் முக்கிய காரணம் என்கிறார்கள்..

மோசம் மாமனார்
அதேபோல, தாஸுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதை பலமுறை சொல்லியும் அவர் திருந்தாததால், கொலை வரை சென்றுவிட்டதாகவும் இன்னொரு காரணம் சொல்லப்பட்டது.. இப்போது 3வது காரணம் வேறு ஒன்று சொல்லப்படுகிறது.. பூனத்தின் மகன் அதாவது முதல் கணவருக்கு பிறந்த மகன் தீபக்கிற்கு திருமணமாகிவிட்டது... தீபக்கின் மனைவியும் இவர்களுடன்தான் ஒன்றாக வசித்து வருகிறார்.. மருமகள் என்றும் பாராமல், அவரிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றாராம் தாஸ்.. அதுமட்டுமல்ல, விவாகரத்து பெற்ற 22 வயது மகளையும் ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார்..

பலிஆடு
இதெல்லாம் சேர்ந்துதான், தாஸை கொல்ல செய்ய முடிவு செய்துள்ளார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மாதமே இந்த கொலையை செய்ய முடிவானது.. ஆனால், அதற்கான சமயம் எதுவும் வராமல் காத்திருந்துள்ளனர்.. சம்பவத்தன்று, மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்து பூனம் தந்துள்ளார்.. அதற்கு பிறகு தாஸ் மயங்கிவிழ, கத்தியை எடுத்து வந்து, பூனமும், தீபக்கும் சேர்ந்து தாஸின் கழுத்தை ஆட்டை அறுப்பதை போல அறுத்துவிட்டனர்.. ரத்தம் வடியும்வரை உடலை ஒரு நாள் முழுவதும் அப்படியே போட்டிருந்தனர்.. உயிர் பிரிந்த நிலையிலும்கூட, தீபக் + பூனம் இருவரின் ஆத்திரமும் தீரவில்லை.

பாலித்தீன் பை
அதற்கு பிறகுதான், உடலை 22 துண்டுகளாக கூறு போட்டனர். பிறகு, பாலித்தீன் பைகளில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்தனர். அதில் இருந்து தினமும், ஒவ்வொரு உடல் பாகங்களாக எடுத்து வந்து, டெல்லி முழுவதும் வீசி எறிந்திருக்கிறார்கள்.. இதுகுறித்து தீபக், போலீஸ் விசாரணையின்போது சொன்னதாவது: "என் அம்மாவுக்கு மொத்தம் 3 கல்யாணங்கள் நடந்துள்ளன.. கடைசியாக அஞ்சன் தாஸ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்... அஞ்சன் தாசுக்கு முன்பு, என் அம்மா கல்லு என்பவர திருமணம் செய்து கொண்டார். அவர் தான் என் அப்பா..

சின்ன சின்ன துண்டு
தாஸுக்கும் 5 திருமணங்கள் நடந்துள்ளன.. இது தவிர பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார். வீட்டில் உள்ள என் மனைவி மீது அவருக்கு ஒரு கண் இருந்தது... இதை உடனே என் அம்மாவிடம் சொன்னேன்.. அதற்கு பிறகுதான், தாசுக்கு போதை மருந்து தந்து கொன்றோம்.. கொலையை செய்துவிட்டோமே தவிர, உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்து அப்புறப்படுத்த முடியவில்லை... அதனால், என் அம்மாவின் உதவியுடன், இறந்த உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன் என்றார்..

சுத்த மோசம்
இதனிடையே, தீபக்கின் மனைவியும் போலீசில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.. அதில், மாமனார் தாஸ் தன்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார் என்றும், தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கூறியுள்ளார்.. அதுமட்டுமல்ல, தீபக்கை அவர் குடிக்க வைத்து, தனக்கு பலமாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தார் என்றும் கூறியுள்ளார். இவர்களிடம் தொடர் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

6 மாதம்
இந்த வழக்கில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. போலீஸார் இதுவரை தாஸின் 6 உடல் துண்டுகளை மட்டுமே மீட்டுள்ளனர்.. ஆனால் முழுமையான உடல் எங்கே என்று தெரியவில்லை.. சிசிடிவியில் பதிவாகியிருந்ததில், ஒரு பையில் வைத்துதான், உடல் பாகங்களை தீபக் கொண்டு சென்றுள்ளாரே, தவிர மற்ற உடல்பாகங்கள் எங்கே என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, போலீசார் விசாரணையில் அஞ்சன் தாஸ் காணாமல் போய் 6 மாதங்களாகியும், அவரது குடும்பத்தினர் ஒருத்தருமே போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

கழுகுக்கண்
இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியதால்தான், பூனம் மற்றும் தீபக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. அவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்... ஆனால், பூனம் இதை பற்றி சொல்லும்போது, என் மகள், மருமகள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்தார் என்னுடைய கணவர்.. பலமுறை திட்டியும் அவர் திருந்தவில்லை.. அதனால்தான் நான் அப்படி செய்தேன்... ஆனால், என் மகன்தான், அவரை கத்தியால் கொன்றான்.. நான் கொல்லவில்லை" என்று கூறியுள்ளார். அதாவது, கொலை செய்தது, தீபக் என்றாலும், உடலை வெட்டி துண்டாக்கவும், அவைகளை கொண்டு போய் காட்டுப்பகுதியில் வீசிவிட்டு வரவும் பூனம் உதவியாக இருந்திருப்பதாக தெரிகிறது.. இன்னமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!!!