பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. செங்கோட்டையில் வேதனையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து உரையாற்றிய மோடி, "பெண்கள் பல்வேறு துறைகளில் தற்போது தலைமை வகிக்கிறார்கள். ஆனால், கவலை அளிக்கும் சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. நமது தாய்மார்கள், சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களுக்காக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த வேதனையை என்னால் உணர முடிகிறது என தனது வேதனையை வெளிப்படுத்துவதாக கூறினார்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறோம். இந்திய விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும் அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக பலர் உழைத்து வருகிறார்கள். விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறார்கள். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் போராடினார்கள். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில், இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம்.
விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மற்றி கொண்டு இருக்கிறோம். தனியார் துறை செயற்கைகோள்கள் ஏவப்படுவது நமக்கு பெருமையான விஷயம். மீனவர்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறோம். நமது யுக்தியும் நோக்கமும் சரியானதாக இருந்தால் விரும்பிய முடிவுகளை ஒருவர் அடைய முடியும். மக்களின் வாழ்க்வை எளிமையாக்கும் முயற்சிகள் தொடர்கிறது.
வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா.. ஏழைகளின் வீடு கனவை நிறைவேற்ற 3 கோடி இலவச வீடுகள் கட்ட நிர்ணயம். ஏழைகள் ஒருபோதும் கண்ணீருடன் உறங்க செல்லக் கூடாது. மக்கள் எளிமையாக அணுகும் வகையில் அரசாங்கம் நடைமுறைகள் வகுத்துள்ளோம்.
ஏழைகளின் கண்ணீரை துடைக்க இலவச உணவு தானியங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது அதிகபட்ச நிர்வாகம் குறைந்தபட்ச அரசை கொண்டிருக்கும். மக்களின் வாழ்வு எளிதாவதை உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. உரிமைகளை மக்கள் எளிதாக பெறும் வகையில் அரசு இருக்க வேண்டும்.
நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் குறைந்தபட்சம் 2 மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அரசு நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் கொள்கைகள் குறித்து கடிதம் எழுதுங்கள். மக்களின் அடிப்படை வசதிகளுக்காக மாற்றங்களை திட்டமிட வேண்டும்.
பெண்கள் பல்வேறு துறைகளில் தற்போது தலைமை வகிக்கிறார்கள். ஆனால், கவலை அளிக்கும் சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. செங்கோட்டையில் எனது வேதனையை நான் வெளிப்படுத்துகிறேன். ஒரு சமூகமாக இந்த விவகாரத்தை நாம் தீவிரமாக பின்பற்ற வேண்டும். நமது தாய்மார்கள், சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களுக்காக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களின் இந்த வேதனையை என்னால் உணர முடிகிறது. நமது, நாடு, சமூகம், மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிந்தவரை விரைவாக விசாரிக்கவேண்டும். கடுமையான தண்டனை பெற்று கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications