சிடி ரவி பதவி பறிப்பு.. ஆனால் சர்பிரைஸ் காத்திருக்கு! அதிரடி காட்டும் பாஜக-கட்சி தலைகீழா மாறிடுச்சே
டெல்லி: தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமாக இருந்த சிடி ரவி உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்ட தேசிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபைத் தேர்தல்கள், தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் போன்றவற்றுக்கான பணிகளில் பாரதிய ஜனதா கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

இதற்கான தேர்தல் வியூகங்கள், கூட்டணி வியூகங்களில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தேர்தலுக்கு ஏற்ப பாஜக உட்கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி தேர்தலை மனதில் வைத்து பாஜக தேசிய தலைமை பதவிகளில் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது.
அதன்படி 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் பாஜக தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முன்னாள் பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அண்டனியின் மகனுமான அனில் ஆண்டனியும் பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த சி.டி.ரவி மற்றும் திலிப் சாய்கியா ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். பீகாரை சேர்ந்த பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங், பாஜக துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இதில் தமிழ்நாட்டுக்கு அறியப்பட்ட முகமான சிடி ரவி தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராகவும் இருந்தார். கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், இதற்காகவே அவர் பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications