குட் நியூஸ்.. ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளுக்குச் சுங்கவரி ரத்து.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு
டெல்லி: ஆக்சிஜனை தயராகிக் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 3.32 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 25 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜனை தேவையை அதிகரிப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சுங்க வரி ரத்து
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகளுக்கு உதவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரெட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த பொருட்களுக்கு சுங்க வரி வசூல் செய்யப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
அதேபோல தடுப்பு மருந்துகள், அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் சுங்க வரி வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. அவை மிக விரைவில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியை அதிகரிக்கலாம்
தலைநகர் டெல்லியிலியுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனைகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அதேபோல தடுப்பூசிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கு உற்பத்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications