அரபி கடல் பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்தது! தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்!
டெல்லி: அரபிக் கடலில் உருவாகி உள்ள பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பைபர்ஜாய் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படியும் தொடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு பைபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேச நாடு இந்த பைபர்ஜாய் என்ற பெயரை வழங்கியது. இதற்கு ஆபத்து/ பேராபத்து/ பேரழிவு என அர்த்தம்.

அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் பைபர்ஜாய் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மேலும் வலுவடையும். இப்புயல் தற்போது அரபிக் கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.
பைபர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் என கருதப்படுகிறது.

அரபிக் கடல் புயல் மற்றும் தமிழ்நாட்டின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம் . அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் நீடிக்கும்; உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்; தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் குளிர்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 105 முதல் 115 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 125 கி.மீ. வேகத்திலும் வீசும். அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications