உ.பி. அரசியலில் புயலை கிளப்பும் தலித் பெண் மரணம்! அகிலேஷ் கட்சி மாஜி அமைச்சர் மகன் ஆசிரமத்தில் சடலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேசத்தில் 2 மாதங்களுக்கு முன்பு மாயமான 22 வயது தலித் பெண் கொலை செய்யப்பட்டு சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சொந்தமான ஆசிரமம் அருகே செப்டிக் டேங்கில் புதைக்கப்பட்டார். உடலை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. 11 மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. விரைவில் அடுத்தகட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இதனால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க 4 கட்சியினரும் எதிர்தரப்பை கடும் வார்த்தைகளால் வசைப்பாடி வருகின்றனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சமாஜ்வாடி கட்சி பிரமுகர்

சமாஜ்வாடி கட்சி பிரமுகர்

இந்நிலையில், தான் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கப்ப கேடா பகுதியில் சமாஜ்வாடி கட்சியினர் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பாடி பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்கின் ஆசிரமத்தின் அருகே அவரது நிலத்தில் உள்ள செப்டிக் டேங்கில் பிணம் புதைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
காசிராம் சவுக்கி பகுதியை சேர்ந்த 22 வயது நிரம்பிய இளம்பெண்ணின் உடல் கம்பளியால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. டாக்டர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

காயங்கள்

காயங்கள்

கழுத்தில் எலும்பு முறிவும், தலையில் காயங்களும் இருந்தது. யாரோ அவரை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிவயந்தது. கொலையான பெண்ணின் தாயை அழைத்து போலீசார் விசாரித்தனர். அவர் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது: அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாடி பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங் தான் 2 மாதத்துக்கு முன்பு மகனை கடத்தினார். இதுதொடர்பாக டிசம்பர் 8 ல் போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஓடியிருப்பார் என கூறிய போலீஸ்

ஓடியிருப்பார் என கூறிய போலீஸ்

என்மகள் வீட்டை விட்டு ஓடியிருப்பார். விரைவில் வந்துவிடுவார். வீட்டுக்கு செல்லும்படி போலீசார் கூறி அவதூறு செய்தனர். ஜனவரி 24 ல் பெண்ணின் தாய் லக்னோவில் அகிலேஷ் யாதவின் கார் முன்பு தீக்குளிக்க முயன்றேன். மகளுக்கு நியாயம் கேட்டும், போலீசாரை விசாரிக்க வலியுறுத்தினேன். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மகளை ரஜோல்சிங் தான் கொலை செய்து உடலை புதைத்திருக்க வேண்டும்'' எனக்கூறினார்.

ஆசிரமம்

ஆசிரமம்

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சசி சேகர் கூறுகையில், ‛‛சம்பவ நாளில் ரஜோல் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலையான பெண்ணை ஆசிரமத்துக்கு அழைத்துள்ளார். இதில் தகராறு ஏற்படவே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது'' என்றார்.

அகிலேஷ் யாதவ் மீது விமர்சனம்

அகிலேஷ் யாதவ் மீது விமர்சனம்

இந்நிலையில் சம்பவம் குறித்து உத்தர பிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இறந்த பெண்ணின் தாய் உங்கள் கார் முன்பு மண்டியிட்டு சம்பவம் குறித்து விசாரிக்க கூறியும் கட்சிக்காரரை தான் காப்பாற்றும் முயற்சியில் இருந்தீர். எஸ்பி(கட்சியின் சுருக்கம், போலீஸ் சூப்பிரண்டின் சுருக்கம்) என்பதால் ஒவ்வொருவரின் குற்றத்தையும் மறைத்து விடுவீர்களோ'' என கேள்வி எழுப்பினார்.

நீதி கிடைக்க வேண்டும்

நீதி கிடைக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி , ‛உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சி பிரமுகரின் இடத்தில் இருந்து தலித் பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியினர் தான் கடத்தி கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்தனர். மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணை இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் ' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+