இந்திய பெருங்கடலில் அதிபயங்கர சூறாவளி.. எங்கு தாக்கும் தெரியுமா? சர்வதேச வானிலை மையம் எச்சரிக்கை

சர்வதேச வானிலை ஆய்வு மையம் வெப்பமண்டல சூறாவளி ஃப்ரெடியின் கண்ணை மேலே இருந்து பதிவு செய்துள்ளது, மேலும் அது மடகாஸ்கரை நோக்கி நகரும் காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச வானிலை ஆய்வு மையம் வீடியோ பிடித்திருக்கிறது. ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கம் நிலநடுக்கம் மறு பக்கம் மழை புயல் வெள்ளம் என பல்வேறு பாதிப்புகளினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Dangerous intense tropical cyclone Freddy expected to make landfall in Madagascar

இந்த நிலையில் இந்தியப்பெருங்களில் உருவாகியுள்ள வெப்ப மண்டல புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சகட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், வெப்பமண்டல சூறாவளி ஃப்ரெடி நெருங்கி வருவதால் மொரீஷியஸ், விமானங்களை தரையிறக்கியது மேலும் அதன் பங்குச் சந்தையை மூடியுள்ளது. மடகாஸ்கரின் நான்கு பகுதிகளில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளை சூறாவளி நெருங்கி வருகிறது. நேற்று மொரிஷியஸில் 3ஆம் எண் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுயது.

மடகாஸ்கர் தீவில் உள்ள அதிகாரிகள் - மொரிஷியஸுக்கு மேற்கே 1,130 கிமீ தொலைவில் ஆப்பிரிக்காவின் கடற்கரையை நோக்கி - இன்று மாலைக்குள் கிழக்கில் மஹானோரோவிற்கும் தென்கிழக்கில் மனகராவிற்கும் இடையே கரையைக் கடக்கும் எனவும் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளியை தீவிர வெப்பமண்டல சூறாவளி என்றும் குறிப்பாக சக்திவாய்ந்த மற்றும் சிறிய வெப்பமண்டல அமைப்பு, அதன் மையத்திற்கு அருகில் தீவிர சூறாவளிக்காற்றை உருவாக்குகிறது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் நாட்டில் புயல் சூறாவளியை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் வலியுறுத்தியுள்ளார். ஃப்ரெடி சூறாவளி மிகவும் வலுவான சூறாவளியாகும், இது மொரீஷியஸ், ரோட்ரிக்ஸ் மற்றும் செயிண்ட்-பிரண்டன் தீவுகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அந் நாட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+