6 சிறுமி பாலியல் வன்கொடுமை.. விடுதலையான தஷ்வந்த்.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!
டெல்லி: 2017ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
2017ஆம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தஷ்வந்த் என்ற இளைஞர், பின்னர் எரித்து கொலை செய்தார். இதன்பின் தஷ்வந்த் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறை தாமதம் செய்தது. இதனால் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஜாமின் கோரினார். அதனை சென்னை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஜாமின் வழங்கியது.

அதன்பின் வீட்டில் இருந்த தாயை அடித்துக் கொன்ற தஷ்வந்த், வீட்டில் இருந்த நகைகளுடன் மும்பை பறந்தார். ஜாமினில் வெளி வந்த தஷ்வந்த், தாயை கொலை செய்துவிட்டு தப்பியதால், இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு கட்ட தேடுதல் வேட்டைக்கு பின், தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.
சுமார் ஓராண்டாக விசாரணை நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்-க்கு மரண தண்டனை விதித்தது. அதேபோல் தாயை கொலை செய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால், தஷ்யந்த் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனால் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் தஷ்வந்தை விடுதலை செய்து உத்தரவொட்டது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப் போகவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் தொல்லை வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications