பாலியல் தொல்லை.. பிரிஜ் பூஷணை கைது செய்து மல்யுத்த வீராங்கணைகளை ரிலீஸ் செய்ய மகளிர் ஆணையம் ஆர்டர்
டெல்லி: டெல்லியில் நியாயம் கேட்டு போராடிய மல்யுத்த வீரர்-வீராங்கணைகளை போலீசார் இன்று தரதரவென இழுத்து சென்று கைது செய்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவார் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். மேலும் வீராங்கணைக்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜகவின் எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டது. அதோடு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியும் அமைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் கூட பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் பாஜக எம்பி என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுவதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் வீரர், வீராங்கணைகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை.

இது பிரச்சனையாக உருவெடுத்தது. மேலும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் டெல்லியில் நியாயம் கேட்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கும் இன்றைய தினம் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் சார்பில் மகளிர் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாய அமைப்புகள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் டெல்லி எல்லைகள் மூடப்பட்டதோடு, போலீசார் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் கூட டெல்லியில் இன்று திட்டமிட்டப்படி மல்யுத்த வீரர், வீராங்கணைகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் வழிமறித்து தரதரவென இழுத்து கைது செய்தனர். இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்பட பலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், டெல்லி மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கணைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தி இருப்பதை அறிந்து மிகவும் மனவலிக்கிறது. மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும். மேலும் டெல்லியில் போராடிய வீரர், வீராங்கணையை விடுக்க வேண்டும். அதோடு வீரர், வீராங்கணையை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications