Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரப்பர் குண்டுகள் + புகைக்குண்டுகள்..தளராத விவசாயிகள்!தடையை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறும் பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் தங்கள் பல ஆண்டு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். பேரணியின் இரண்டாவது நாளான இன்றும் அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அதையெல்லாம் இந்த அரசு பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. இவர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவும் இல்லை. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசை ஒப்புக்கொள்ள வைத்தது.

Defying the police barriers, the farmers continue their rally in Delhi for the 2nd day

அந்த அளவுக்கு வீரியம்மிக்க போராட்டத்தை தற்போது விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி டெல்லி நோக்கி பேரணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பேரணியின் முதல் நாளான நேற்று பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பெரும் மோதல் வெடித்திருக்கிறது. ஹரியானா காவல்துறையினர் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளனர். மட்டுமல்லாது ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர். இதில் 60 விவசாயிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீஸ் தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இருப்பினும், இரண்டாம் நாளான இன்று டெல்லி நோக்கி பேரணியாக செல்வதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஆறு மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருள் ஆகியவற்றுடன் விவசாயிகள் களம் இறங்கியுள்ளதால் இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளனர். மேலும், டெல்லிக்கு அருகில் உள்ள ஆசிரமங்கள், குருத்வாராக்களில் தங்கியுள்ள விவசாயிகளின் சிறு குழுக்களும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

தில்லி மற்றும் ஹரியானா இடையே திக்ரி, ஜரோடா மற்றும் தன்சா எல்லையைச் சுற்றி டெல்லி போக்குவரத்து போலீஸ் போக்குவரத்து மாற்றத்தை செய்திருக்கிறது. ஹரியானா அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் ஏற்கெனவே மொபைல் இன்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பேரணியின் இரண்டாவது நாளான இன்று பஞ்சாப்-ஹரியான எல்லையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை முன்னேறவிடாமல் தடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+