டெல்லி வன்முறை வழக்கு- தேடப்பட்ட ஆம் ஆத்மி மாஜி கவுன்சிலர் தாஹிர் உசைன் சரண்
டெல்லி: டெல்லி வன்முறை வழக்குகளில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் பாஜக ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கொடூர தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்.

இதில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்த தாக்குதல்களில் 45 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் அங்கித் சர்மா என்ற உளவுப்பிரிவு அதிகாரியும் உயிரிழந்தார்.
அங்கித் சர்மா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைனை தேடி வந்தது. இந்த கொலை வழக்கில் தாஹிர் உசைன் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டார். இதனையடுத்து தாஹிர் உசைன் தலைமறைவானர். இதனால் அவரை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.
அதேநேரத்தில் தமக்கும் உளவுப் பிரிவு அதிகாரி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறிவந்தார். இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தாஹிர் உசைன் இன்று சரணடைந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications