"ரத்த வாந்தி.." பிரபல உணவகத்தில் சாப்பிட்ட உடன் அலறிய நண்பர்கள்! நள்ளிரவில் பகீர் சம்பவம்! என்னாச்சு
டெல்லி: குருகிராமில் பிரபல ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 5 பேர் திடீரென வாந்தி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வீக் எண்ட் என்றாலே நண்பர்களுடன் வெளியே சென்று என்ஜாய் செய்துவிட்டு அப்படியே ஹோட்டலில் சென்று சாப்பிடுவதே இங்கே பெரும்பாலானோருக்கு வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், சில நேரம் ஹோட்டலில் மோசமான சம்பவங்களும் நடந்து விடுகிறது.

மவுத் ப்ரெஷ்னர்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் டெல்லி குருகிராமில் நடந்துள்ளது. அங்கே ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 5 பேர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளனர். அவர்கள் உணவைச் சாப்பிட்ட பிறகு அங்கிருந்த மவுத் ப்ரெஷ்னரை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதன் பின்னரே திடீரென அவர்களுக்கு ரத்த வந்தி வந்துள்ளது. கடந்த மார்ச் 2ஆம் தேதி டெல்லி குருகிராமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அடுத்தடுத்து ஐந்து பேர் வாயில் இருந்தும் ரத்தம் கொட்ட ஆரம்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மொத்தமாக வாய் அப்படியே எரிவது போன்ற ஒரு உணர்வும் ஏற்பட்டுள்ளது.. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கித் குமார் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குருகிராமில் உள்ள செக்டார் 90 உணவகத்தில் உள்ள லாஃபோரெஸ்டா ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வாந்தி: இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவரது மனைவி உட்பட ஐந்து நண்பர்கள் வலி மற்றும் எரிச்சலால் அலறுவது தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவில் திடீரென ஒருவர் உணவகத்தின் தரையில் வாந்தி எடுக்கிறார். அங்கே இருந்த மற்றொரு பெண் அவரது வாயில் ஐஸ்கட்டி வைத்துக் கொண்டு "எரிகிறது", "எரிகிறது" என்று கதறுகிறார்.
இது தொடர்பாக அங்கித் குமார் கூறுகையில், "ஹோட்டலில் உள்ள மவுத் ப்ரெஷ்னரில் என்ன கலந்துள்ளார் எனத் தெரியவில்லை. ஆனால், அதை எடுத்துக்கொண்ட உடன் அனைவருக்கும் ரத்த வாந்தி வந்துவிட்டது. நாக்கில் வெட்டுக் காயங்களும் கூட ஏற்பட்டுள்ளது. வாய் எரிகிறது. அவர்கள் உள்ளே என்ன கலந்தார்கள் எனத் தெரியவில்லை" என்றார்.
புகார்: இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர். அங்கித் குமார் போலீசில் அளித்த புகாரிலும், "மவுத் ப்ரெஷ்னரின் பாக்கெட்டை மருத்துவரிடம் காட்டினேன், அது மவுத் ப்ரெஷ்னரே இல்லையாம். டிரை ஐஸ் என்று சொல்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டால் உயிரிழப்பே கூட ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்" என்றார்.
அதை எடுத்துக் கொண்ட உடன் திடீரென பாதிக்கப்பட்டவர்களின் வாயில் எரியும் ஒருவித உணர்வு ஏற்பட்டுள்ளது. பிறகு உடனடியாக வாந்தியும் வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு ரத்த வாந்தியும் வந்துள்ளது.. எரிச்சலைக் குறைக்க அவர்கள் வாயில் தண்ணீரை ஊற்றி கொப்பளித்துள்ளனர். இருப்பினும், அது துளி கூட அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.
இதையடுத்து அந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications