அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை.. இப்போது நிலக்கரி பற்றாக்குறை, அடுத்து? மத்திய அரசை விளாசும் ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் போதியளவில் நிலக்கரி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது இதேபோலத் தான் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு கடைசி வரை கூறி வந்ததை நாம் மறந்துவிடக்க கூடாது என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சாடியுள்ளார்.

நமது நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

தற்போது நாட்டில் நிலக்கரி உற்பத்தி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாடியுள்ளது.

 நிலக்கரி பற்றாக்குறை

நிலக்கரி பற்றாக்குறை

இதனால் நாட்டில் நிலக்கரிக்குப் பெரியளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்து சில நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் வாரங்களில் நாட்டில் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் இது குறித்து இன்று விளக்கம் அளித்திருந்தார்.

 மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

நிலக்கரி பற்றாக்குறை குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த சில நாடுகளில் இந்த பிரச்சினையைத் தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது போதியளவில் மின்சாரம் கையிருப்பில் உள்ளதாகவும் ஆர்கே சிங் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை சாடியுள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது இதேபோலத் தான் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை இல்லை என்றே மத்திய அரசு கடைசி வரை கூறி வந்ததை நாம் மறந்துவிடக்க கூடாது என்று விமர்சித்துள்ளார்.

 கொரோனா 2ஆம் அலை

கொரோனா 2ஆம் அலை

இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டில் ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. ஆனால், அப்போதும் கூட மத்திய அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. இன்று நிலக்கரியில் நமக்கு அதேபோல ஒரு பற்றாக்குறை நிலை தான் ஏற்பட்டுள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் இந்த நேரத்தில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற வகையில் பேசி வருகிறார்.

 பொறுப்பற்ற செயல்

பொறுப்பற்ற செயல்

நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்களும் நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்து வருகின்றனர் இந்த நேரத்திலும் கூட அவர் அப்படியொரு பிரச்சினையே இல்லை எனக் கூறுகிறார். இது குறித்து டெல்லி முதல்வர் கடிதம் எழுதியிருக்கக் கூட என்றும் கூறுகிறார். இது பொறுப்பற்ற ஒரு செயல்" என்று அவர் விமர்சித்துள்ளார்.

 மின்வெட்டு சிக்கல்

மின்வெட்டு சிக்கல்

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார பற்றக்குறை ஏற்படலாம் என ஏற்கனவே தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஆகிய மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. ஏற்கனவே, பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தொடங்கிவிட்டன. அங்குள்ள சில பகுதிகளில் 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில், திடீரென நிலக்கரிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. திடீரென அதிகரித்த மின் தேவை, நிலக்கரி சுரங்கம் இருக்கும் இடங்களில் பெய்யும் கனமழை, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரிக்கு விதிக்கப்படும் அதிக வரி ஆகியவை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+