டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு கடும் அதிர்ச்சி-பாஜக ஹேப்பி அண்ணாச்சி- Phalodi Satta Bazar பரபர சர்வே
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 36-க்கும் அதிகமான இடங்களை ஆம் ஆத்மி கட்சி பெற்று ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்யும் என்கிறது Phalodi Satta Bazar கருத்து கணிப்பு. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 39 முதல் 41 இடங்களைக் கைப்பற்றும்; பாஜக 29 முதல் 31 இடங்களில் வெல்லும் எனவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இத்தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூடம் கிடைக்காது என்பது Phalodi Satta Bazar சர்வே முடிவாகும்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 699 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். டெல்லியில் பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக மோதுகின்றன.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக 2013-ல் ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடி ஆட்சியைத் தக்க வைத்தது. தற்போத் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று 4-வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. பாஜகவோ 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஓரிரு இடங்களிலாவது வென்றாக வேண்டும் என போராடுகிறது.
70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். 2015, 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 67 மற்றும் 62 இடங்களைக் கைப்பற்றி அதிரடி வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அலை வீசலாம் என கூறப்பட்டாலும் ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை பலமாக இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் Phalodi Satta Bazar டெல்லி தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. Phalodi Satta Bazar-ன் அண்மைய கருத்து கணிப்பு முடிவுகள்:
ஆம் ஆத்மி கட்சி 39 முதல் 41 இடங்கள்
பாஜக 29 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் 0
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications