Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தி கற்றுக்கொள்! இல்லைனா இங்கிருந்து ஓடிடு!" ஆப்பிரிக்க நாட்டவரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்! அடாவடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பூங்கா ஒன்றில் கால்பந்து பயிற்சி அளித்து வந்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர் பாஜக கவுன்சிலர் ரேணு சௌத்ரி மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. பல்வேறு தரப்பினரும் பாஜக கவுன்சிலர் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாக ரேணு சௌத்ரி விளக்கம் கொடுத்துள்ளார்.

கிழக்கு டெல்லியின் பத்ரபர்கஞ்ச் பகுதியில் மயூர் விஹார் ஃபேஸ் 1ல் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளாகவே அவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்குக் கால்பந்து பயிற்சி அளித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அந்த நபர் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று பத்ரபர்கஞ்ச் கவுன்சிலர் ரேணு சவுத்ரி மிரட்டியுள்ளார்.

Hindi BJP

இந்தி கற்றுக்கொள்

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரேணு சவுத்ரி கால்பந்து பயிற்சியாளரைக் கண்டிக்கிறார். அதில் மேலும், "நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? அடுத்த ஒரு மாதத்தில் இந்தி கற்காவிட்டால், பூங்காவிற்குள் நீங்கள் வரவே கூடாது.. இந்த நாட்டில் தான் நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள். பிறகு ஏன் உள்ளீர் மொழியை கற்க மறுக்கிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

Hindi BJP

மிரட்டல்

ரேணு இதுபோல பேசியதைக் கேட்டு அருரில் இருந்த சிலர் சிரிக்க தொடங்குகிறனர். உடனே கடுப்பான ரேணு, "இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல, நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். எட்டு மாதங்களுக்கு முன்பே இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என எச்சரித்தேன். இந்த நாட்டில் பணம் சம்பாதிப்பவர், இந்த நாட்டின் மொழியையும் கற்க வேண்டும்.. எட்டு மாதங்களுக்கு முன்பே அவரை கண்டித்தபோது, உள்ளூர் மக்கள் தான் எதுவும் செய்ய வேண்டாம் என்றனர். அந்த நேரத்தில், அவர் தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதால், எதுவும் செய்ய வேண்டாம் என்றனர். நானும் விட்டுவிட்டேன்.. ஆனால், இந்த முறையும் அப்படிச் செய்ய முடியாது" என்கிறார்.

பூங்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கப் பயிற்சியாளரை மிரட்டும் இந்தச் சம்பவத்தை அவரே வீடியோவாக எடுத்து அதைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை இதுபோல மிரட்டுவது சரியானது இல்லை என்றும் இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நெட்டிசன்கள் சாடினர்.

Hindi BJP

விளக்கம்

இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், கவுன்சிலர் ரேணு சௌத்ரி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தான் யாரையும் மிரட்டவில்லை என்றும், பயிற்சியாளருக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் இடையே தகவல்தொடர்பை எளிதாக்குவதே தனது நோக்கம் என்றும் விளக்கமளித்தார். பூங்காவை நிர்வகிக்கும் டெல்லி மாநகராட்சியின் ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் புரியாது எனவும் இதன் காரணமாகவே இந்தி கற்க சொல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் டெல்லி மாநகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தில் கால்பந்து சொல்லித் தருகிறார். இது அரசுக்குச் சொந்தமான இடம். இதிலிருந்து அவர் வருமானம் ஈட்டுகிறார். எனவே, அதன் ஒரு பகுதியை டெல்லி மாநகராட்சிக்குச் செலுத்துமாறு கேட்டேன். இருப்பினும், அப்போது தனக்கு இந்தி புரியவில்லை என்று அவர் கூறினார். அவருடன் தொடர்பு கொள்வது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கடினமாக இருந்தது.

Hindi BJP

சிக்கல் என்ன

இதன் காரணமாகவே இந்தி கற்றுக்கொள்ளுமாறு கேட்டேன். அவருக்காக ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து, அதற்கான கட்டணத்தையும் செலுத்த முன்வந்தேன். ஆனால், அவர் தான் கண்டுகொள்ளவில்லை. எனவே நான் சொன்னதில் தவறில்லை. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுகிறார்கள், எனவே வெளிநாட்டவர்கள் மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+