Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான்.. டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி.. பின்னணியில் திடுக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் வெடித்தது. இதில் 13 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் காரை ஓட்டி வந்தவர் பெயர் டாக்டர் உமர் என சந்தேகிக்கப்பட்டது. அதனை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கார் ஓட்டிய தாக்குதல் நடத்தியது உமர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் கடந்த 10ம் தேதி இரவு திடீரென்று கார் வெடித்து சிதறியது. மாலை 6.52 மணிக்கு டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே மெதுவாக சென்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர்.

delhi bomb blast

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை நேற்று மத்திய அரசு உறுதி செய்தது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.

ஏனென்றால் அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தன். இதனால் அவன் தான் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அவன் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது. இதனால் டெல்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த உமர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கோயில் கிராமத்தை சேர்ந்தவன். இவனது முழுப்பெயர் உமர் உன் நபி. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் (Al Falah Medical College) பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளான். இவர் மீது சந்தேகம் எழுந்ததால்உமரின் தாய் ஷகீமா பானோ, சகோதரர்களான ஆசிக் மற்றும் ஜாரூர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் டிஎன்ஏ சேகரித்து ஒப்பிட்டு பார்த்ததில் உமர் தான் கார் வெடிப்பை நிகழ்த்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உமருக்கும், ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் போலீசாரால் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் அடீல் அகமது ராதர் கைது செய்யப்பட்டான். இவன் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவன் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் கூறிய தகவலை தொடர்ந்து தான் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஹரியானாவுக்கு சென்றனர். அங்கு உமர் வேலை செய்த ஃபரிதாபாத் அல்ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் ஷகீலை கைது செய்தனர். இதையடுத்து தான் உமர் எஸ்கேப் ஆனதோடு, கார் வெடிப்பை நிகழ்த்தி உள்ளான்.

உமர் பயன்படுத்திய கார், டெல்லி வெடிப்புக்கு 11 நாட்களுக்கு முன்பாக தான் அவன் வாங்கி உள்ளான். அடுத்தடுத்து தனது கூட்டாளிகள் போலீசில் சிக்கியதால் உமர் நடுங்கி போனான். கடந்த மாதம் 30ம் தேதி முதல் பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்லவில்லை. மேலும் கடந்த நவம்பர் 9 ம் தேதி முதல் அவன் மாயமானான். ஃபரிதாபாத்தி்ல 2,9000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் சிக்கிய நிலையில் தலைமைறைவாகி உள்ளான். அவன் தனது 5 செல்போன்களையும் ஸ்விட்ச்ஆப் செய்துவிட்டு தாஜ் கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் பதுங்கி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவன் பாகிஸ்தானின் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சார்பில் செயல்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. முதற்கட்டமாக இந்த கும்பலில் 9 முதல் 10 பேர் வரை செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 5 முதல் 6 பேர் டாக்டர்கள். இவர்கள் ‛ஒயிட்காலர்' பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உமரின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் உள்ளது என்பதை உறுதி செய்ய போலீசார் ஹரியானாவின் ஃபரிதாபாத், லக்னோ மற்றும் காஷ்மீரில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கும்பல் டாக்டர் என்பதை வைத்து வெடிப்பொருட்கள் தயாரிப்பதற்கான ரசாயனங்களை வாங்கி பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+