Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்.,கை விடுங்க..பயங்கரவாதிகளுக்கு பிளான் போட்டு கொடுத்த துருக்கி..டெல்லி ‛அட்டாக்’ கில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் தான் என்பதும், இது பயங்கரவாத தாக்குதல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தாக்குதலுக்கான திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயிலில் கடந்த 10ம் தேதி மாலையில் திடீரென்று கார் வெடித்து சிதறியது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். அமோனியம் நைட்ரேட் உதவியுடன் ஏஎன்எப்ஓ மற்றும் டெட்டனேட்டர் உதவியுடன் காரை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

delhi bomb blast

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. டெல்லி போலீசார், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என்பதும், தாக்குதலை நடத்தியது ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் என்ற பயங்கரவாதி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உமர் டாக்டராக பணியாற்றியவன். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் (Al Falah Medical College) டாக்டராக பணியாற்றி வந்தார். கார் வெடித்ததில் அவன் செத்துப்போனார். காரில் கிடந்த உடல் பாகங்களின் டிஎன்ஏ மாதிரியும், அவரது குடும்பத்தின் டிஎன்ஏ மாதிரியும் ஒத்தப்போனதால் உமர் தான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உமருக்கும், ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்ட புல்வாமாவை சேர்ந்த டாக்டர் அடீல் அகமது ராதருக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் பெயரில் போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், மிரட்டல் விடுத்தும் போஸ்டர் ஒட்டிய வழக்கில் அடீல் அகமதுது ராதர் கைது செய்யப்பட்டான்.

இவன் கொடுத்த தகவலின் பேரில் தான் ஃபரிதாபாத்தில் முஜாமில் என்ற டாக்டர் கைது செய்யப்பட்டார். அவன் உமர் வேலை செய்த பல்கலைக்கழகத்தில் தான் பணி செய்தார். இதனால் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதியான அசூத் மசாரின் ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயங்கரவாத கும்பல் துருக்கியில் சதித்திட்டம் தீட்டியது அம்மபலமாகி உள்ளது. துருக்கியை எடுத்து கொண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு தான் ஒத்து ஊதுகிறது. சமீபத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியது. நம் நாட்டை தாக்க ட்ரோன்களை துருக்கி நாட்டின் ஆபரேட்டர்கள் ஏவினர். ஆனால் அனைத்தையும் நாம் முறியடித்தோம். இதனால் நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவு முறிந்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த பயங்கரவாதிகள் துருக்கி பயணித்து சதி திட்டங்களை தீட்டி உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கார் வெடிப்பை நிகழ்த்தி செத்துப்போன உமர் மிகவும் அமைதியானவராக வலம் வந்துள்ளார். யாரிடமும் அதிகம் பேசாமல் மங்குனியாக தன்னை காட்டியுள்ளார். இதனை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இப்படி குடும்பத்தினரிடம் அப்பாவி போல் நடித்த உமர் தான் பெரிய சதிகார பயங்கரவாதியாக மாறி உள்ளான். இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‛‛ உமரின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக மாறி உள்ளதுது. அடிக்கடி ஃபரிதாபாத் - டெல்லி இடையே பயணம் செய்துள்ளார். ராம்லீலா மைதானம் மற்றும் சுனேரி மசூதிக்கு அடிக்கடி விசிட் செய்துள்ளார். அதேபோல் கார் வெடிப்பு நிகழ்ந்த தினத்தில் கூட அவர் சுனேரி மசூதி அருகே தான் காரை நிறுத்தி அதன் உள்ளே 3 மணிநேரத்துக்கும் மேலாக இருந்துள்ளார்.

மதியம் 3 மணிக்கு காரில் அங்கு வந்தவர் மாலை 6.40 மணி வரை அங்கேயே இருந்துள்ளார்.அதன்பிறகு தான் காரை செங்கோட்டையை நோக்கி ஓட்டி சென்று தாக்குதல் நடத்தி உள்ளார். ஃபரிதாபாத்தில் அவன் பயன்படுத்திய இன்னொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த கார்களுக்கு டெல்லி முகவரியில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது உமர் செத்துவிட்டார். அவருடன் ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் அவர்கள் துருக்கிக்கு பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. துருக்கி பயணத்துக்கு பிறகு தான் உமர் தனது செயல்பாட்டை மாற்றி உள்ளான். உமர் உள்பட இருவரின் பாஸ்போர்ட்டும் அதனை உறுதி செய்துள்ளது. அங்கு தான் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. துருக்கியில் செயல்படும் பயங்கரவாத கும்பலுடன் தான் உமர் உள்பட கைதான டாக்டர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உமர், முஜாமில் ஆகியோர் டெலிகிராம் குழு ஒன்றில் இணைந்துள்ளனர். அதன் வழியாக தான் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் கூட்ட நெரிசல் மிக்க இடங்களை தாக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

தீபாவளிக்கு மிஸ்ஸான இடங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுவினர் தயாராகி வந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் போலீசார் அக்டோபர் மத்தியில் மோப்பம் பிடித்து பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்களை நாடு முழுவதும் கைது செய்ய தொடங்கினர். இதில் உமரின் கூட்டாளி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உமர் மிஸ்ஸான நிலையில் அவன் தான் டெல்லி தாக்குதலை நடத்தி உள்ளார்'' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் துருக்கியில் எந்த பயங்கரவாத அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருந்தனர்? என்பதை போலீசார் இன்னும் உறுதியாக கூறவில்லை. இருப்பினும் இந்த கும்பலுக்கும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதற்கான சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் இந்த பயங்கரவாத கும்பல் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+