Delhi Chalo 2.0: டிரோன்களை அனுப்பியா உளவு பார்க்கிறீங்க? பட்டத்தை பறக்கவிட்டு பந்தாடிய விவசாயிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சலோ போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா எல்லையில் தொடர்ந்தும் முகாமிட்டுள்ளனர். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தங்களை உளவு பார்க்க அனுப்பிய டிரோன்களை பட்டங்களைப் பறக்கவிட்டு விவசாயிகள் தடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020-21-ல் ஓராண்டு காலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். உலகை உலுக்கிய இந்த தொடர் போராட்டத்தால் மத்திய அரசு பணிந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தாம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. அப்போது விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

 Delhi Chalo 2.0: Farmers use kites to counter police drones

கோரிக்கைகள் என்ன?: விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் சில உறுதி மொழிகள் தரப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; 2021 போராட்டத்தின் போது லக்கிம்பூரில் 8 விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ10,000 ஓய்வூதியம் தர வேண்டும்; 2020-21 போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்பதுதான் விவசாயிகள் கோரிக்கை.

தடுத்து நிறுத்திய ஹரியானா: இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் புறப்பட்டனர். ஆனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் பஞ்சாப்- ஹரியானா எல்லையான சம்புவில் விவசாயிகள் தடுக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில அரசு, விவசாயிகளை உள்ளே நுழையவிடாமல் தடுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கண்ணீர் புகை குண்டுகளை தாறுமாறாக வீசி விவசாயிகளை கலைந்து போக முயற்சிகளை மேற்கொள்கிறது ஹரியானா போலீஸ்.

உஷார் நிலையில் டெல்லி: அதேபோல ஹரியானாவை தாண்டி டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கான்கிரீட் தடுப்புகள் அமைத்து துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி: பஞ்சாப் விவசாயிகள் மீது ஹரியானா மாநில போலீசார் கொடூர தாக்குதல்களை நடத்துவதற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மத்திய அரசு தரப்பிலும் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

டிரோன்களுடன் மோதும் பட்டங்கள்: தற்போதைய நிலையில் தடையை உடைத்து டெல்லியில் முகாமிட்டு போராடியே தீருவது என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதனிடையே பஞ்சாப்- ஹரியானா எல்லை சம்பு பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகளை டிரோன்கள் மூலம் அம்மாநில போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனால் போராடும் விவசாயிகளோ டிரோன்களை தடுக்கும் வகையில் சரமாரியாக பட்டங்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தற்போதும் பஞ்சாப்- ஹரியானா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+