காங். தலைவர் யார்? கேள்வி கேட்டு கொந்தளித்த கபில்சிபல்- அழுகிய தக்காளிகளை அள்ளி வீசி போராட்டம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர்? கட்சியின் முடிவுகளை எடுப்பது யார்? என கலகக் குரல் எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் வீடு மீது அக்கட்சி தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை வீசி போராட்டம் நடத்தினர்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி உட்கட்சி மோதல்களால் சிதறும் வாய்ப்புள்ளது.

அமித்ஷாவுடன் அமரீந்தர்சிங் சந்திப்பு
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அமரீந்தர்சிங் பாஜகவில் இணையலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கலாம் என தெரிகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் மாஜி முதல்வர்
இதேபோல் கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கோவா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. கோவாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விஸ்வரூபம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

கபில் சிபல் கொந்தளிப்பு
இப்படி காங்கிரஸ் செல்வாக்கான மாநிலங்களில் அந்த கட்சிக்குள் குழப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர், எல்லை மாநிலமான பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இப்படி குழப்பம் நிலவுவது பாகிஸ்தானுக்குதான் சாதகம். காங்கிரஸ் கமிட்டியில் யார் தான் தலைவர் என்பது தெரியவில்லை. இன்னமும் உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவகாரங்களில் யார்தான் முடிவு எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை உடனடியாக விவாதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வேண்டும் என சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை பதிலும் கிடைக்கவில்லை என்றார். இதே கருத்தை மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் தெரிவித்திருந்தார்.

காங். தொண்டர்கள் போராட்டம்
கபில் சிபலின் வெளிப்படையான இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள கபில் சிபல் வீட்டை நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது கபில் சிபல் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்கிற பதாகைகளை ஏந்தி இருந்தனர். அத்துடன் அழுகிய தக்காளிகளை கபில் சிபல் வீடு மீதும் காங்கிரஸ் கட்சியினர் வீசி எறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது கபில் சிபல் காரையும் காங்கிரஸ் தொண்டர்கள் சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications