டெல்லி மதுபான கொள்கை ஊழல்: தெலுங்கானா எம்எல்சி கவிதா ஜாமீன் மனு டிஸ்மிஸ்!
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு எனும் புயல் தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் இணைந்து கவிதா முறைகேட்டில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ100 கோடி கொடுத்தார் என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலேயே கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் கவிதா. ஆனால் கவிதாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications