இந்திய மல்யுத்த சம்மேளன EX தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை முடித்து வைப்பதாக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூனியர் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2023-ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஜூனியர் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2023-ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த பெண்ணின் தந்தை, தனது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக வாக்கு மூலம் அளித்தார். டெல்லி போலீசார் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்த நிலையில், இதை ஏற்றுக்கொண்ட டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், போலீசார் விளக்கத்தை ஏற்று போக்சோ வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. போக்சோ வழக்கு கைவிடப்படாலும் பிரிஜ் பூஷன் மீது சாக்ஷி மாலிக் உள்பட 6 வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications