13 வயசுதான்.. திடீரென வெளியே தெரிந்த வயிறு.. சோதித்த டாக்டர்களுக்கு ஷாக்.. அதிர்ந்த போலீஸ்!
டெல்லி: டெல்லியில் 13 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் இன்னொரு செய்தி அந்த சிறுமியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெரு நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை விட அதிக வன்முறைகளை எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் நடந்து இருக்கும் சம்பவம் ஒன்று தேசத்தையே உலுக்கி உள்ளது.

சிறுமி
அந்த 13 வயது சிறுமி டெல்லியில் சமயபூர் பத்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். பள்ளி செல்லும் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை மோசமாகி உள்ளது. தினமும் வாந்தி எடுப்பது, மயங்கி விழுவது என்று அந்த சிறுமி கடுமையாக சிரமப்பட்டு இருக்கிறார். பள்ளிக்கு செல்வதும் இதனால் இயலாத காரியம் ஆகி உள்ளது. அதோடு படிப்பிலும் அந்த சிறுமிக்கு நாட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் அவரின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாவதை அந்த சிறுமியின் குடும்பத்தினர் கவனித்து உள்ளனர்.

டெல்லி
இதையடுத்து அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே சிறுமிக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த உடல் பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த சிறுமியின் கருவை கலைக்க முடியாது. அதற்கான காலம் கடந்துவிட்டது. அந்த சிறுமியை மருத்துவமனையில் வைத்து கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் தனது மகள் கர்ப்பமாக இருந்ததை சிறுமியின் தாயார் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

மருத்துவமனை
இந்த நிலையில்தான் கடந்த புதன் கிழமை அந்த சிறுமிக்கு வயிற்று வலி பெரிதாகி உள்ளது. இதில் அந்த சிறுமிக்கு தீவிர சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில், சிறுமிக்கு அப்போதே பிரசவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். கடந்த புதன் கிழமை இரவு இதையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நொடிகளில் அந்த குழந்தை இறந்தது. அண்டர் ஏஜ் சிறுமி என்பதாலும், குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது.

புதன் கிழமை
இதையடுத்து போலீசில் புகார் கொடுத்து, அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த சிறுமிக்கு நேற்று சுயநினைவு திரும்பிய பின் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் நபர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு சென்று அடிக்கடி அந்த சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளார். இதையடுத்து அவரிடம் மருத்துவ மாதிரிகள் எடுக்கப்பட்டது.

போலீசார்
போலீசார் நேற்று இரவே அந்த நபரை கைது செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த சிறுமி கர்ப்பம் ஆவார் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் விசாரணையில் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications