டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்பீரிடம் தோல்வி.. வெறும் 7 ஓட்டு.. வெட்ட வெட்ட வளர்ந்த அதிஷி.. டெல்லிக்கு கிடைத்த வொண்டர் வுமன்!

டெல்லியில் கல்காஜி தொகுதியில் அதிஷி மார்லேனா வெற்றிபெற்றது அக்கட்சியினரை பெரிய அளவில் உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

    டெல்லி: டெல்லியில் கல்காஜி தொகுதியில் அதிஷி மார்லேனா வெற்றிபெற்றது அக்கட்சியினரை பெரிய அளவில் உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்காற்றியவர்தான் அதிஷி மார்லேனா. டெல்லி அரசியலில் ஆம் ஆத்மிக்கு என்று மிக முக்கியமான முகத்தை கொடுத்தவர்தான் அதிஷி மார்லேனா.

    ஒரு குட்டி கதை சொல்றேன்.. விஜய் ஸ்டைலில் ரஜினி, ராமதாஸை கலாய்த்த எம்பி செந்தில் குமார்.. செம!ஒரு குட்டி கதை சொல்றேன்.. விஜய் ஸ்டைலில் ரஜினி, ராமதாஸை கலாய்த்த எம்பி செந்தில் குமார்.. செம!

    கல்வி எப்படி

    கல்வி எப்படி

    டெல்லி அரசியலை தெரிந்தவர்களுக்கு அதிஷி மார்லேனா குறித்து தெரியாமல் இருந்திருக்காது. கட்சியில் இவர்தான் நம்பர் 3 தலைவர். டெல்லி கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியாவின் முன்னாள் ஆலோசகர். டெல்லியில் அரசு பள்ளிகளை முன்னேற்றியதன் மூளை இவருடையதுதான். ஆம் அதிஷிதான் டெல்லியின் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பெரிய அளவில் உயர்த்தினார். மனிஷ் சிசோடியாவிற்கு இது தொடர்பான திட்டங்களை இவர்தான் வகுத்துக் கொடுத்தார்.

    டெல்லி பிரச்சாரம்

    டெல்லி பிரச்சாரம்

    டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் அதிஷி செயல்பாடு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. கல்வி மட்டுமின்றி மருத்துவ துறையிலும் இவர் நிறைய திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். மருத்துவ துறையில் டெல்லியில் கடந்த 5 வருடங்களில் 4 இடங்களை முன்னேற்றி உள்ளது. அதேபோல் புதிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் மதுபானம், புகையிலை பொருட்களில் கடுமையான கட்டுப்பாடு விதிக்க சட்டம் கொண்டு வந்தார்.

    பெண்கள் பாதுகாப்பு

    பெண்கள் பாதுகாப்பு

    பெண்கள் பாதுகாப்பில் டெல்லி பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு இவரின் திட்டங்களும் முக்கிய காரணம் என்றும் கூறலாம். ஆம் ஆத்மியில் கெஜ்ரிவாலுக்கு மிக முக்கியமான நம்பகத்தன்மை கொண்ட நபராக இவர் திகழ்ந்து வருகிறார்.

    எங்கு பிறந்தார்

    எங்கு பிறந்தார்

    அதிஷி டெல்லியில் பிறந்தவர்தான். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில்தான் இவர் பிஜி, யூஜி இரண்டும் படித்து இருக்கிறார். மக்களை பணிகளின் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்று நம்பக்கூடியவர். அதேபோல் மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் இவர் அதிக கவனம் செலுத்த கூடியவர். டெல்லியில் மருத்துவ துறையையும், கல்வியையும் மாற்றியதில் அதிஷிதான் முக்கிய பங்கு வகித்தார்.

    என்ன சம்பளம்

    என்ன சம்பளம்

    மிக எளிமையாக உடை அணிந்து சாந்தமான முகத்துடன் எப்போதும் காணப்படுவார். குரலை கூட அதிஷி உயர்த்தி பேசியது இல்லை. அதிஷியின் வாய் பேசியதை விட அவர் செயல்தான் பலமுறை பேசி இருக்கிறது. இவர் வெறும் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு (உண்மையில் ஒரு ரூபாய் சம்பளம்) கட்சியில், ஆட்சியில் பணியாற்றினார். ஆம் ஆத்மி கட்சிக்கு என்று முகத்தை உருவாக்கியவர் இவர்தான். அக்கட்சிக்காக கொள்கையை உருவாக்கியவர் இவர்தான்.

    எப்படி செயல்பட்டார்

    எப்படி செயல்பட்டார்

    ஆம் ஆத்மியில் அதிஷி நிறைய பணிகளை செய்து இருக்கிறார். 2015-2018ல் இவர் கல்வித்துறை ஆலோசகராக இருந்தார். அதன்பின் 2013ல் கட்சியின் கொள்கையை வடிவமைக்கும் குழுவில் இருந்தார். 2015ல் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் குழுவில் இருந்தார் . 2015ல் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனார். விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2020ல் கட்சியின் வாக்குறுதிகளை வடிவமைக்கும் குழுவிற்கு வந்தார்.

    அரசியல்

    அரசியல்

    2013ல் இருந்து இவர் அரசியலில் இருக்கிறார். ஆனால் இது அதிஷி போட்டியிட்ட இரண்டாவது தேர்தல் ஆகும். அதிஷியை பலமுறை பாஜக மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளது. காற்று உள்ள பலூன்தான் அதிஷி. சீக்கிரம் வெடித்து விடுவார். அவரை தேவையல்லாமல் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு திறமை இல்லை என்று பலமுறை அதிஷியை பாஜக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் எதையும் அதிஷி காதில் போட்டுக்கொண்டது இல்லை.

    கம்பீர் எப்படி

    கம்பீர் எப்படி

    கடந்த லோக்சபா தேர்தலில் அதிஷி டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் பாஜக சார்பாக போட்டியிட்டு 6,96,158 வாக்குகள் பெற்று வென்றார். ஆனால் அதிஷி 2,19,328 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இதனால் பாஜக அதிஷியை மிக மோசமாக கலாய்த்தது. டெல்லி மக்கள் அதிஷி போன்ற ஒருவரை விட்டுவிட்டு, கம்பீரை வெல்ல வைத்தது பெரிய விமர்சனங்களை சந்தித்தது.

    வெற்றி பெற்றார்

    வெற்றி பெற்றார்

    அதன்பின்தான் தற்போது அவமானங்கள், தோல்விகளை மீறி அதிஷி மீண்டும் சட்டசபை தேர்தலில் நின்றார். டெல்லியில் கல்காஜி தொகுதியில் அதிஷி போட்டியிட்டார். மொத்தம் 55897 வாக்குகள் பெற்று அதிஷி வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் தர்மபீர் சிங் 44,504 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் முதல் முறை அதிஷி சட்டசபை செல்கிறார். இவருக்கு பெரும்பாலும் சுகாதாரத்துறை அமைச்சரவை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    போராடி வெற்றி

    போராடி வெற்றி

    முதலில் நேற்று முன்னிலையில் இருந்த அதிஷி பின் பின்னடைவை சந்தித்தார். அதன்பின் வேறு 7 ஓட்டுகள் முன்னிலையில் நீண்ட நேரம் இருந்தார். இதனால் அதிஷி மீண்டும் தோல்வி அடைந்து விடுவாரோ என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர்களின் நினைப்புகளை எல்லாமே தவிடு பொடியாக்கி அதிஷி வென்றுள்ளார். அவரின் இந்த வெற்றி உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு சேவை செய்யும் வொண்டர் உமன் அதிஷி.. உண்மையில் இந்திய அரசியலில் ஒரு அதிசயம்தான்!

    அதிஷி டிவிட்

    அதிஷி டிவிட்

    தன்னுடைய வெற்றி தொடர்பாக அதிஷி செய்துள்ள டிவிட்டில், டெல்லி மக்கள் எல்லோருக்கும், ஆம் ஆத்மி கட்சி மீது வைத்த நம்பிக்கைக்காக மிக்க நன்றி. மக்கள் முன்னேற்றத்திற்கான அரசியலை மக்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். கடைசி ஐந்து வருடத்தில் டெல்லியில் கல்வி முன்னேறி இருக்கிறது, அரசு பள்ளிகள் இந்தியாவிலேயே சிறந்ததாக மாறியுள்ளது. இனி நான் கல்காஜி தொகுதியை டெல்லியிலே சிறந்த தொகுதியாக மாறுவேன், என்று அதிஷி கூறியுள்ளார்.

    English summary
    Delhi Election Result: Atishi Marlena success in the Kalkaji is the real victory for AAP politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X