யோகி முதல் அமித் ஷா வரை.. தோல்வி அடைந்த யுக்தி.. 'அந்த' சக்ஸஸ் பார்முலாவில் சறுக்கல்.. என்ன நடந்தது?
பாஜகவின் மிக முக்கியமான சக்ஸஸ் பார்முலா ஒன்று டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: பாஜகவின் மிக முக்கியமான சக்ஸஸ் பார்முலா ஒன்று டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
ஆம் ஆத்மி டெல்லியில் மீண்டும் மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது. ஐந்து வருடம் அந்த கட்சி கொடுத்த மிக சிறப்பான ஆட்சிக்கு பரிசாக தற்போது, ஆம் ஆத்மி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்றுள்ளது, பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன் மூலம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

பாஜக எப்படி
பொதுவாக பாஜக தலைவர்கள் எங்காவது சர்ச்சையாக பேசினால் அவர்கள் பெரிய அளவில் வெற்றிபெறுவார்கள். உதாரணமாக போபாலில் பிரக்யா தாகூர் வெற்றிபெற்றார். அவருக்கு எதிராக குண்டுவெடிப்பு வழக்கு இருக்கிறது . காந்தி குறித்து, பாபர் மசூதி குறித்து மிக மோசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் கூறி இருக்கிறார். ஆனாலும் கூட போபால் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அதேபோல் பாஜகவில் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.

யார் எப்படி
ஆனால் டெல்லி தேர்தலில் பாஜகவின் இந்த செயல்பாடு வெற்றிபெறவில்லை. டெல்லியில் பாஜக செய்த பிரச்சாரத்தை மக்கள் விரும்பவில்லை. டெல்லி தேர்தல் முழுக்க பாஜக மிகவும் மோசமான கருத்துக்களை பிரச்சாரமாக செய்தது. முக்கியமாக பாஜகவின் மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகிய மூன்று பேர்தான் மக்களை தூண்டி விட்டார்கள். முக்கியமாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஷாகீன் பாக் பகுதியில் போராடும் நபர்களை சுட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வேறு என்ன சொன்னார்
அதேபோல் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, ஷாகீன் பாக் பகுதியில் போராடும் எல்லோரும் குற்றவாளிகள். அங்கிருக்கும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளே வருவார்கள். உங்கள் தங்கைகள், மனைவிகளை வன்புணர்வு செய்வார்கள். மோடிதான் உங்களுக்கு உதவ வேண்டும். மோடிக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் நீங்கள் மோடியிடம் உதவி கேட்க முடியாது என்று குறிப்பிட்டார்.

கபில் மிஸ்ரா
அதேபோல் இன்னொரு பக்கம் பாஜக இளம் தலைவர் கபில் மிஸ்ராவும், இதேபோல் ஷகீன் பாக் மிக சிறிய பாகிஸ்தான். அங்கு போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டார். இவர்களின் இந்த தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுதான், அங்கு துப்பாக்கி சூடு நடந்ததற்கு காரணம். அவரை போன்ற இளைஞர்களை தங்கள் பேச்சுக்கள் மூலம் தூண்டி விடுகிறார்கள், என்றும் புகார் வந்தது.

வேறு என்ன
இதெல்லாம் போக டெல்லியில் ஷாகீன் மக்களுக்கு தோட்டக்களை பரிசளிக்க வேண்டும். அவர்களுக்கு பிரியாணி கொடுக்க கூடாது என்று உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறினார். டெல்லியில் போராட்டக்காரர்கள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டார். ஆனால் இவர்கள் இப்படி கோபமாக செய்த பிரச்சாரம் எதுவும் டெல்லியில் எடுபடவில்லை. இது உத்தர பிரதேசமோ, பீகாரோ இல்லை. இது டெல்லி என்று மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

அனுராக் தாகூர்
மிக முக்கியமாக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வி அடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால் மூன்று இடங்களில் மட்டும்தான் இங்கு பாஜக வென்றது. பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பிரச்சாரம் செய்த மூன்று இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இவருக்கு 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பின்பும் கூட இதுதான் நிலை. மோசமாக தொடர்ந்து பேசி வந்த கபில் மிஸ்ராவும் தோல்வி அடைந்துள்ளார்.

அனுராக் தாக்கூர்
அதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதும் கூட மக்கள் மத்தியில் கோபத்தை வரவைத்து இருக்கிறது. இதன் மூலம் பாஜகவின் வெறுப்பு அரசியல் பாணி பிரச்சாரம் இந்தியாவில் இனியும் எடுபடாது என்று நிரூபணம் ஆகியுள்ளது. டெல்லி மக்கள் இந்தியாவிற்கு புதிய பாணி அரசியலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தேசிய அளவில் இது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications