டெல்லி தேர்தல்: பெண்களுக்கு 'ஜாக்பாட்'.. வாக்குறுதிகளை வாரி இறைத்த ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பெண் வாக்காளர்களை இலக்கு வைத்து ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளன. பெண்களுக்கு மாதம் ரூ2,500 உதவித் தொகை; முதியோர் உதவித் தொகை உயர்வு; ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன அரசியல் கட்சிகள்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. டெல்லி தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளையே சந்தித்து வரும் காங்கிரஸ் இம்முறை சில இடங்களையாவது வெல்ல வேண்டும் என போராடுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகளை வீசி இருக்கின்றன.
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை:
- பெண்களுக்கு பாஜக மாதம் ரூ2,500 வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியோ பெண்களுக்கு மாதம் ரூ2,100 வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறது.
- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவம் வ் அழங்கும் சஞ்சீவனி யோஜனா திட்டத்தை கடந்த டிசம்பர் மாதமே ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
- ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைந்தால் குடியிருப்போர் நலச்சங்கள், தனியார் பாதுகாவலர்களை நியமிக்க நிதி உதவி வழங்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.
- ஆம் ஆத்மி கட்சி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ1 லட்சம் நிதி உதவி மற்றும் ரூ10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்குவோம் என்பதும் ஆம் ஆத்மியின் வாக்குறுதி.
- டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போருக்கும் இலவச மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
பாஜகவின் தேர்தல் அறிக்கை:
- மகிளா சம்ரித் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ2,500 வழங்கப்படும்.
- அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ரூ21,000 மற்றும் 6 ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும்.
- பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து அரசு நலத் திட்டங்களும் தடையின்றி தொடரும்.
- அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க பாஜக நடவடிக்கை எடுக்கும்.
- ஏழைகளுக்கு ரூ500 விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்; ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- 60 வயது முதல் 70 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத் தொகை ரூ2,000 வழங்கப்பட்டு வ்ருகிறது; இதனை ரூ2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்.
-70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத் தொகை ரூ2,500-ல் இருந்து ரூ3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை:
- அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- மானிய விலையிலான எரிவாயு சிலிண்டர்கள் ரூ500-க்கு வழங்கப்படும்.
- அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணைய், பருப்பு, டீத்தூள் ஆகியவை ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
- பெண்களுக்கு மாதம் ரூ2,500 உதவித் தொகை வழங்கப்படும்.0
- டெல்லி குடிமக்களுக்கு ரூ25 லட்சம் சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ8,500 உதவித் தொகை வழங்கப்படும். உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications