பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது... பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கிரின் சிக்னல்!
டெல்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
கைது செய்த அமைதியான போராட்டக்காரர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் போன் மூலம் விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்ஹதரப்பிரதேசம் ஆகிய மாநிலவிஷ்வாயிகள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

திசைமாறிய பேரணி
இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.

மோடி பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த நிலையில் விவசாயிகள் போன் மூலம் விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிலையில் விவசாயிகளும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கதவு திறந்தே உள்ளது என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்துக்கு தலைமை தாங்கி வரும் சம்யுக்தா கிசன் மோர்ச்சா விவசாய சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயிகள் சம்மதம்
விவசாயிகள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு வந்துள்ளனர். எனவே அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் போலீசார் கைது செய்கிறார்கள். கைது செய்த அமைதியான போராட்டக்காரர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

உறுதிமொழி எடுத்தனர்
போலீஸ் மற்றும் பாஜக குண்டர்களின் தொடர்ச்சியான வன்முறை அரசாங்கத்திற்குள் உள்ள அச்சத்தை தெளிவாகக் காட்டுகிறது. தங்கள் படைகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய போராட்டத்தை பலவீனப்படுத்தவும் அழிக்கவும் போலீசார் முயற்சிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒரு நாள் நோன்பைக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர மகாத்மா காந்தியின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்று சம்யுக்தா கிசன் மோர்ச்சா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications