கேட்கவே காது கூசுதே! நம்பி வீட்டில் தங்கிய நண்பரின் மகளை சீரழித்த அரசு உயரதிகாரி.. அதிரடியாக கைது!
டெல்லி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், டெல்லி அரசு உயர் அதிகாரியை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நண்பரின் மகளுக்கு பாதுகாவலர் என்ற போர்வையில் மோசமான காரியத்தைச் செய்த அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வரும் பிரேமோதய் காகாவின் நண்பர் கடந்த 2020-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து, அந்த நண்பரின் மகளான சிறுமி, பிரேமோதய் காகாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பாதுகாவலர் என்ற போர்வையில் இருந்துகொண்டே சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளை பிரேமோதய் காகா செய்து வந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2021 ஜனவரி மாதம் வரை அந்தச் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் பிரேமோதய் காகா. தனது நண்பரின் மகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரி பிரேமோதய் ஹாக்கா மீது வழக்குப்பதிவு செய்தது டெல்லி காவல்துறை.
சிறுமியைச் சீரழித்த அரசு அதிகாரி பிரேமோதய் காகாவுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். சிறுமி, தனது அப்பாவின் நண்பரால் கர்ப்பமான தகவலை அவரிடம் சொன்னதும், அச்சிறுமையை கன்னத்தில் அறைந்து தாக்கி, கருகலைப்பு மாத்திரை வழங்கிய குற்றச்சாட்டில் பிரமோதய் ஹாக்காவின் மனைவி சீமா ராணியையும் டெல்லி போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வெளியான நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக தப்பிச் செல்வதற்கு பிரேமோதய் காகா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து காலை 9.35 மணிக்கு மனைவியுடன் காரில் வெளியேறியுள்ளார். இந்தக் காட்சி அவரது வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளில், பிரேமோதய் காரை ஓட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறுவது பதிவாகியிருக்கிறது. இந்தப் பதிவுகளை டெல்லி போலீசார் கைப்பற்றி, தீவிரமாகத் தேடினர். பிரமோதய், வழக்கறிஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரமோதய் காகாவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். முக்கிய குற்றவாளியான பிரேமோதய் ஹாக்காவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு உயர் அதிகாரி பிரமோதய் காகாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
