டெல்லியில் பரபரப்பு.. நீதிபதி மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர்.. .மனைவி பலி.. மகன் மூளைச் சாவு!
டெல்லியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டதால், அந்த பெண் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டதால், அந்த நீதிபதியின் மனைவி ரீத்து மரணம் அடைந்துள்ளார்.
நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளை மரணம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா. இவருடைய மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டார்
அவர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தி இருப்பது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் மனைவிக்கு நெஞ்சில் அடிப்பட்டுள்ளது. மகனுக்கு குண்டு பாய்ந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.

சொல்லிவிட்டு சுட்டார்
போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். நீதிபதி கிருஷ்னனுக்கு கால் செய்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், உங்கள் மகன் மற்றும் மனைவியை கொலை செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டு சுட்டார். இதுவரை இவர்களுக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் வந்தது இல்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

தாக்கி உள்ளார்
இந்த நிலையில், அந்த போலீஸ் அதிகாரி, அந்த இருவரையும் சுடும் முன் மோசமாக தாக்கி உள்ளார். முக்கியமாக நீதிபதியின் மனைவியை மோசமாக அடித்துள்ளார். பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணம் அடைந்தார்
இந்த துப்பாக்கி சூடு காரணமாக தற்போது அந்த நீதிபதியின் மனைவி ரீத்து பலியாகி உள்ளார். இதயத்தில் பாய்ந்த குண்டு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டு உள்ளது. நிறைய ரத்த போக்கு ஏற்பட்ட காரணத்தால் உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை என்று தகவல் வந்துள்ளது.

மூளை மரணம்
அதேபோல் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறான். அவனுக்கு தற்போது மூளை மரணம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலையில் குண்டு பாய்ந்த காரணத்தால் மூளை மரணம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications