ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி; ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீடு பெற்றது. இதில் முறைகேடு நடந்தது என்பது வழக்கு.

இந்த அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளன. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
ப.சிதம்பரம் மீது ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ந் தேதி டெல்லியில் ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.
தற்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை சிதம்பரம் நாடியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications