ஜந்தர் மந்தர் கோஷம்.. இந்து ரக்ஷா தளம் தலைவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது.. டெல்லி ஹைகோர்ட்
டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக கோஷமிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிங்கி சவுத்ரி தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரை கைது செய்வதில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தின் போது குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக பேசியதாக இந்து ரக்ஷா தளம் தலைவர் பிங்கி சவுத்ரி மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்த போது, டெல்லி நீதிமன்றம் "நாம் இருப்பது தாலிபான் நாட்டில் இல்லை" என்று கடுமையாக விமர்சித்தது.
டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி அனில் ஆன்டில் ஆகஸ்ட் 21 அன்று பிறப்பித்த உத்தரவில், "நாம் இருப்பது தாலிபான் நாட்டில் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இருக்கிறோம். நமது பன்மை தன்மை மற்றும் பன்முக கலாச்சாரம் ஆகியவை தான் நாட்டை ஆளும் அரசின் கொள்கையாகும்.

நீதிமன்றம் கருத்து
நாடு முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி, ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸைக் கொண்டாடும் இந்த நேரத்தில், சிலரது மனங்கள் சகிப்புத்தன்மையில்லாத மற்றும் சுயநல நம்பிக்கைகளுடன் பின்னிபிணைந்து காணப்படுகின்றன

வெறுப்பு பிரச்சாரம்
இந்து ரக்ஷா தளம் தலைவர் பிங்கி சவுத்ரியின் பேச்சுக்களை பார்க்கும் போது, வகுப்புவாத முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது, அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தும் சைகைகள் உள்ளன. அவரது முகநூல் பக்கத்தில் சமூகத்தின் பிற பிரிவுகளிடையே வெறுப்பு மற்றும் தவறான விருப்பத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இயற்கையான உரிமை
பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று கூற முடியாது, இது அரசியலமைப்பில் பிரிவு 19 (1) (அ) இன் கீழ் வழங்கப்பட்ட மிகவும் நேசத்திற்குரிய இயற்கை உரிமையாகும், ஆனால் இப்போது இதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

மத நல்லிணக்கம்
பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை என்று எல்லாவற்றையும் ஆதரிக்க முடியாது. அது மற்றவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்கு நீட்டிக்க முடியாது. சமாதானம், மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை பராமரிப்பதற்கு பாதகமான செயல்களுக்கு எல்லாம் பேச்சுரிமை என்று கூறி விட்டுவிட முடியாது. நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை ஆக்கிரமித்து அழிக்க அனுமதிக்க முடியாது.

வகுப்பு வாத கலவரம்
சுதந்திரமான கருத்து என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அரசியலமைப்பு கோட்பாடுகளை நசுக்க அனுமதிக்க முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் இயற்கையில் கடுமையானவை . இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புவாத பதட்டங்களை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வழிவகுத்து, பொது மக்களில் உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

விசாரணை ஆரம்ப கட்டம்
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட உள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவரிடம், குற்றத்தில் சம்பந்தம் உடைய பொருள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு டெல்லி நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தெரிவித்து இருந்தது.

நோட்டீஸ்
இந்நிலையில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிங்கி சவுத்ரி முன்ஜாமின் கோரி முறையீடு செய்தார். அந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரம் இந்த மாத தொடக்கத்தில் ஜந்தர் மந்தர் நிகழ்ச்சியில் கோஷம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பிங்கி சவுத்ரியை கைது செய்வதற்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் மூலம் பிங்கி சவுத்ரி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா இன்று போராட்டம்.. ஜந்தர் மந்தரில் 1,000 போலீஸ் குவிப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications