Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நிலை மோசமடைந்தது.. பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அங்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ராஜீவ் காந்தி சூப்பர் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Delhi health minister Satyendar Jain’s condition worsens, will be given plasma therapy

அவருக்கு நுரையிரல் பாதிப்புடன் கடுமையான நிமோனியாவும் பாதித்துள்ளது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஜெயின் உடல் நிலை தொடர்ந்து மோசடைந்து வருகிறது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். அங்கு அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார் இதேபோல் டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் அணில் பைஜ்லாலும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நல்ல உடல் நலத்துடன் விரைவில் தேறிவர பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

Delhi health minister Satyendar Jain’s condition worsens, will be given plasma therapy

இதனிடையே கடந்த இரண்டு நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடன் உரையாடிய நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசாங்க வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

Delhi health minister Satyendar Jain’s condition worsens, will be given plasma therapy

ஞாயிற்றுக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஜெயின் கலந்து கொண்டார், இதில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது துணை மனீஷ் சிசோடியா மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+