லோக்சபா தேர்தல் பின்னடைவுக்கு காரணம் என்ன? பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு டெல்லி மேலிடம் சம்மன்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனித்துப் பெரும்பான்மையை பெற முடியாமல் போனது ஏன் என்பது தொடர்பாக அக்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் இம்மாத இறுதியில் ஆலோசனை நடைபெற உள்ளது. டெல்லியில் ஜூலை மாத இறுதியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சி மேலிடம் கூட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம் என பிரசாரம் செய்தது பாஜக. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் கூட பாஜகவால் பெற முடியவில்லை. பாஜக தனித்து 243 இடங்களில்தான் வென்றது. இதனால் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார்.

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை இன்னமும் அந்த கட்சியின் தலைவர்களாள் ஜீரணிக்க முடியவில்லை. அத்துடன் 7 மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் பாஜக பெரும் தோல்வியையே தழுவியது. இது பாஜக டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.
தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் பாஜக எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளும் கூட பாஜகவுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஏன் பின்னடைவு ஏற்பட்டது? என்பது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை டெல்லி பாஜக மேலிடம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை மாதம் இறுதியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை டெல்லிக்கு அழைத்துள்ளது மேலிடம். இந்தக் கூட்டத்தில் பாஜகவுக்கு உங்கள் மாநிலங்களில் ஏன் இவ்வளவு பெரிய பின்னடைவு? என்பது உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டு விளக்கங்கள் பெறப்பட இருக்கிறதாம்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications