Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கடைசி வரை சிறையிலிருப்பதே நல்லது.." உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி! மத்திய அரசு முன்வைத்த பாயிண்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் 2020ம் ஆண்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நாட்களை வரை நடந்தது. டெல்லியிலும் இதேபோல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது திடீரென அதில் வன்முறை வெடித்தது.

Delhi High court Denies Bail to Umar Khalid Sharjeel Imam 7 Others in 2020 Riots Conspiracy Case

டெல்லி கலவரம்

இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லி ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், முகமது சலீம் கான், ஷிஃபா உர் ரெஹ்மான், ஆதார் கான், மீரன் ஹைதர், ஷதாப் அகமது, அப்துல் காலித் சைய்பி மற்றும் குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் அடங்கிய அமர்வு ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. நீண்டகாலச் சிறைவாசம் மற்றும் விசாரணை தாமதம் ஆகிய ஒரே காரணத்திற்காக ஜாமீன் வழங்குவது எல்லா வழக்குகளிலும் பொருந்தாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

டெல்லி ஐகோர்ட்

போராட்ட உரிமை என்பது முழுமையானது அல்ல என்றும் கட்டுப்பாடற்ற போராட்ட உரிமை என்பது அரசியலமைப்பு கட்டமைப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் என்றும் டெல்லி ஐகோர்ட் அமர்வு கூறியுள்ளது. போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை சதியை அனுமதிக்க முடியாது என்றும் வன்முறைப் போராட்டங்கள் பேச்சு சுதந்திரத்தின் வரம்பிற்குள் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆதாரம் இருக்கு

சிறையில் இருக்கும் அனைவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்களும் வலிமையாக இருப்பதாக டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. இந்தக் கட்டத்தில் ஆதாரங்களை விரிவாக ஆராய்வது சாத்தியமில்லை என்பதால் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருப்பதே நல்லது

முன்னதாக வழக்கு விசாரணையின் போது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் காவலில் உள்ளதாகவும், விசாரணையின் மெதுவான வேகத்தைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி வாதிட்டனர். இருப்பினும், அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, திட்டமிட்டு சதி செய்து கலவரத்தைச் செய்துள்ளதாக வாதிட்டார். மேலும், உலக அளவில் இந்தியாவை அவதூறு செய்ய நடத்தப்பட்ட சதித்திட்டம் இது என்றும் நாட்டிற்கு எதிராகச் செயல்பட்டோர்.. விடுவிக்கப்படும் வரை சிறையில் இருப்பது நல்லது என்று அவர் கூறினார்.

அதேநேரம் டெல்லி ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். விரைவில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+