கேஸ் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு.. நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் காலியானதால் கேன்டீன் மூடல்
டெல்லி: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் தொடரும் சூழலில், அது உலகளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இதனால் கேஸ் சிலிண்டர் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒரு பக்கம் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனச் சொல்லும் சூழலில், மற்றொரு பக்கம் டெல்லி உயர்நீதிமன்ற வளாகமே கேஸ் சிலிண்டர் சப்ளை இல்லாமல் பாதிப்பை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த மாதம் 28ம் தேதி மோதல் வெடித்தது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மோதல் 2வது வாரமாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாகப் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ள சூழலில், இந்தியாவில் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சிலிண்டர்
சிலிண்டர் புக் செய்தால் பல நாட்களுக்கு பிறகே டெலிவரி கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், பலரும் கையிருப்பில் ஒரு சிலிண்டரையாவது வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இருப்பினும், கேஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு இல்லை என்றும் உற்பத்தியை 10% வரை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதுபோல விளக்கம் கொடுக்கும் சூழலில், டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் பற்றாக்குறை எதிரொலித்துள்ளது. அங்குள்ள வழக்கறிஞர்கள் உணவகத்திற்குத் தேவையான கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் முக்கிய உணவுகள் மெனுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகம் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும் கேன்டீன் நிர்வாகம் தெரிவித்தது. இன்று பிற்கபல் கேன்டீன் நிர்வாகம் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டது.
சிலிண்டர் பற்றாக்குறை
இது தொடர்பான அறிவிப்பை லைவ் லா வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "சமையல் எரிவாயு சிலிண்டர் போதியளவு கிடைக்காததால், வழக்கறிஞர்கள் உணவகத்தில் முக்கிய உணவுகளைத் தயார் செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்கனவே சென்னை, பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள சூழலில், அது இப்போது டெல்லி நீதிமன்றத்திலேயே எதிரொலித்துள்ளது.
கேன்டீன் மூடல்
கேஸ் சிலிண்டர் விநியோகம் கிடைத்தவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று உணவகம் தெரிவித்தாலும், அது எப்போது சாத்தியமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் மேலும், "கேஸ் விநியோகம் எப்போது மீட்டெடுக்கப்படும் என்பது குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. விநியோகம் கிடைத்தவுடன் முக்கிய உணவுகளைத் தயாரிப்பதைத் தொடங்குவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் சப்ளையில் பற்றாக்குறை இல்லை.. விநியோகம் சீராக இருப்பதாகக் கூறி வரும் சூழலில், இன்னொரு பக்கம் நீதிமன்ற வளாகத்திலேயே கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
இந்த இக்கட்டான சூழலைச் சரி செய்ய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. குழாய் வழி எரிவாயு பெறும் வீடுகள், சிஎன்ஜி (CNG) வாகனங்கள், மற்றும் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சகம் மேலும், "மத்திய கிழக்கில் தொடரும் மோதல், ஹார்முஸ் வழித்தடம் வழியாக இயற்கை எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.. நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை துரிதமாக எடுத்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications