ராகுலின் இந்திய குடியுரிமை ரத்தாகிறதா? சுப்பிரமணியன் சுவாமியின் மனு விசாரணைக்கு ஏற்பு.. பெரிய சிக்கல்
டெல்லி: ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் இரட்டை குடியுரிமையுடன் இருப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று பட்டியலிட அறிவுறுத்தி உள்ளதால் ராகுல் காந்திக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகவும் ராகுல் காந்தி உள்ளார். இவரை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளார் என சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ளதால் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.
கடந்த 2019ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதத்தில், ‛‛ சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2019 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் 2003ம் ஆண்டில் பிரிட்டன் பேக்அப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களில் ராகுல் காந்தி அதன் இயக்குநர், செயலராக இருப்பதாக உள்ளது. அதேபோல் அந்த நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை இரட்டை குடியுரிமை முறை நடைமுறையில் இல்லை. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 9 என்பது இரட்டை குடியுரிமையை தடுக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெற்றவராக கருதமாட்டார் என்பதை அந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 9 உறுதி செய்கிறது. இதனால் பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ள ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி விளக்கமளித்த நிலையில் தற்போது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோரை விமர்சனம் செய்து வருகிறார்.
இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி பிரிட்டனிலும் குடியுரிமை உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகாரளித்தேன். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் நரூலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில் எந்த விதிமீறலும் இல்லை. இதனால் இந்த மனுவை பொதுநல வழக்காக ரோஸ்டர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக்கூறினார். இருப்பினும் ராகுல் காந்தியின் குடியுரிமை பற்றி இன்று நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்பது தற்போது ராகுல் காந்திக்கு புதிய சிக்கலாக மாறலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கின் மூலம் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை நிலைக்குமா? இல்லையா? என்பது ரோஸ்டர் பெஞ்ச் விசாரணையின் தீர்ப்பில் தான் தெரியவரும். சுப்பிரமணியன் சுவாமி தொடர்பான மனு தள்ளுபடியானால் ராகுல் காந்திக்கு பிரச்சனை இல்லை. மாறாக ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications